பக்கம்:சீனத்தின் குரல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பி. சிற்றரசு

87


என்று மக்கள் குதூகலத்தாலாடிய பிறகு, பெரிய மீன் சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் ஷ்ரிம்ப் என்ற புழுவைத் தின்கிறது, புழு மண்ணைத் தின்கிறது.

அதேபோல் வெளிநாட்டு பெரிய மீன் சியாங்கே ஷேக் என்ற சிறிய மீனைத் தின்கிறது. சிறிய மீன் போன்ற சியாங்கே ஷேக், நெளிவதைப் போன்ற ஷாங்காய் சர்க்கார் என்ற புழுவைத் தின்றார். அந்த புழு மக்கள் என்ற மண்ணைத் தின்னவேண்டியதுதான் முறையென்ற வெட்டி வேதாந்தம் பேசிய கண்மூடிகளைக் கதிகலங்க வைத்தனர் மக்கள் என்ற வீர உரையை எட்டு திக்கிலும் எழுதி காட்டிய பிறகு, அளவுகடந்து உண்பதும் தேவையின் அளவே கிடைக்காததுமான கொடிய நிலையை நீண்ட நாட்களாக போரிட்டு போரிட்டு, மக்கள் வாழ்க்கைக்கு மட்டக்கோல் அமைத்துவிட்டோம் என்ற ஜெய பேரிகை முழக்கத்தை நிரபராதிகள் செவியில் புகுத்திய பிறகு, இல்லாதவனையும், அதை வெளியில் சொல்லாதவனையும், எதிர்த்து நில்லாதவனையும், ஈயாத பொல்லாதவனையும், மக்கள் நிலையை கல்லாதவனையும், குடிலர்கள் ஏவிய வழி செல்லாதவனையும், கொடுமைகளைக் கண்டு கண்டு குடல் நடுங்கி சாய்ந்த தள்ளாதவனையும், பிறந்த தாயகம் புதைக்குழியில்விழ பொய்வழி காட்டிய பொல்லாதவனையும்,

அறத்தாலாற்றியபணி, அன்பால் அயலாருக்குக் காட்டிய வழி, அபினியால் வந்தபழி, அஞ்சை