பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8 இயற்கைப் பண்புகள்

இளமையில் முற்போக்கு

"உலக வாழ்க்கை எப்பொழுதும் மாறுதலை அடிப்படையாகக் கொண்டே நிகழ்கின்றது. எங்கு பார்த்தாலும் எந்த விஷயத்தை நோக் கினாலும் ஒன்றும் இருந்தபடி இருப்பதில்லை. மாறுதலை அடைந்து கொண்டேயிருககின்றது. இதனை உணராத மக்களே நம்மைக் காய்வர். கொஞ்ச வருஷங்களுக்கு முன்பு கிராப் செய்து கொள்ள வேண்டுமென்று கிளர்ச்சி செய்தேன். அப்பொழுது நடந்த விஷயங்கள் உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். சுமார் ஒன்றரை வருடங்கள் கிளர்ச்சி செய்தோம்... அதற்காக சாஸ்திரங்களையோ, புராணங் களையோ ஆராயவில்லை. நான் கிராப் செய்து கொண்டு வெளியே வரத் தொடங்கியதும், பல பல ஜனங்கள் எதிர்த்து என்னோடு வாதாடினார்கள். (திரு. இராம. சுப்பிரமணியம் சிறுவயதில் கிராப் வைத்தபோது ஒரு மாதம் வீட்டுக்குள்வர, வீட்டார் அனுமதியில்லை.) ........... இந்தக் கிராப்புக்கு இவ்வளவு எதிர்ப்பிருந்தால் கலப்புக் கல்யாணத்துக்கு எவ்வளவு எதிர்ப்பு ஏற்படக் கூடும்!"