பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 95

இல்லை. எட்டயபுரம் மன்னரைப் போய்ப் பார்த்துச் சீட்டுக் கவி அனுப்பினார். மன்னர் இவரைச் சந்திக்கவே பயந்து, ஆதரவு தராமல் விடுத்தார்.

இவ்வாறு மனம் கசந்த நிலைமையிலேயே, 'கவிதையினி வானவர்க்கே அன்றி, மக்கட் புறத்தார்க்கீயோம்' என்று உறுதி பூண்டார் கவிஞர். இந்த உறுதியைத்தான் வை.சு.வின் பேரன்பும் ஆதரவும் மாற்றி விட்டன.... பாரதியார் காலமான பின்னரும், பாரதியார் குடும்ப நலனில் வை.சு. ஊக்கம் காட்டினார். பாரதியார் காலமான பின் பாரதி நூல்களை வெளியிட்டு, அதிலிருந்து ஜீவனம் நடத்தப் பாரதி குடும்பம் முயற்சி செய்தது. இது வெற்றிகரமாக நடக்கவில்லை. 1923இல் பாரதி குடும்பத்தின் சிரமத்தைப் போக்கும் கருத்துடன் பாரதி நூல்களின் உரிமையைப் பத்தாயிரம் ரூபாய்கொடுத்து வாங்கிக் கொள்ளவும் ஒழுங்காகப் பிரசுரிக்கவும் வை.சு.முன் வந்தார். இதற்குப் பாரதியாரின் மனைவி செல்லம்மா சம்மதித்தார். எனினும் எடுத்த காரியம் முற்றுப் பெறாமலே போயிற்று. திரு.வை.சு. சண்முகம் அவரின் மறைவு தமிழுக்கும் தமிழ்ப்புலவர்களுக்கும் பெரிய நஷ்ட மாகும்."