பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 119

சுப்பிரமணிய பாரதியார் பாடல் பெற்றது மான இந்து மதாபிமான சங்கம் இன்றும் காரைக்குடியில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்திற்கு வந்திருந்த தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்து அவரைப் பற்றியும் அவரது தொண்டுகளைப் பற்றியும் புகழ்ந்து பல பாடல்களைப் பாடி அவரிடம் கொடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட வை.சு. சண்முகம் அவர்கள், தன்னைப் பற்றி அதிகமாகப் புகழ்ந்து பாடியிருப்பதால் அதனை அச்சிட்டு வெளியிட விரும்பாமல் பல ஆண்டுகள் வரை தன் பெட்டியி லேயே வைத்திருந்தார். அப்பாடல்கள் காரைக்குடிக் கவிஞர் முடியரசனிடம் கிடைத்து அதை அவர் 'எழில்' இதழில் வெளியிட்டார்.

சமயப்பணி, கல்விப்பணி, நாட்டுப்பணி மட்டுமல்ல சமூக சீர்திருத்தப் பணியிலும் நகரத்தார் சமூகத்தில் பலர் சிறந்து விளங்கி உள்ளனர். அதிலும் பெரியார் வழியைப் பின்பற்றிச் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து முதல் முதலாகக் கலப்பு மணம் செய்து கொண்டவர் மரகதவல்லி முருகப்பா அவர்கள். இதனை அடுத்து அச்சமூகத்தில் நடந்த கலப்புத்திருமணங்கள் பல. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை நீலாவதி இராம. சுப்பிரமணியம் திருமணம்,

அருணகிரி சுந்தரி திருமணம், வை.சு. சண்முகம் மஞ்சுளா திருமணம் முதலியன.

"குமரன்" ஆசிரியர் காரைக்குடி சொ. முருகப்பா அவர்கள் காரைக்குடியில் நடத்திய இராமாநாதபுர மாவட்டச் சுயமரியாதை மாநாட்டிற்குப் பொருளாலும்