பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

118 சீர்திருத்தச் செம்மல்


களால் தோற்றுவிக்கப் பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், கருமுத்து தியாகராசச் செட்டியார் அவர்களால் தோற்றுவிக்கப் பெற்ற மதுரையில் உள்ள கல்வி நிறுவனங்களும், கோடி கொடுத்தும் குடியிருந்த வீடும் கொடுத்த கொடை வள்ளல் அழகப்ப செட்டியார் அவர்களால் காரைக்குடியில் தோற்றுவிக்கப் பெற்ற கல்வி நிறுவனங்களும் இதனை மெய்ப்பிக்கும், பிறரிடம் நன்கொடை பெறாமல் தங்களின் சொந்த வருமானத்தைக் கொண்ட பல்கலைக்கழகங்களையும் பல துறைக் கல்வி நிறுவனங்களையும் தோற்றுவித்த பெருமை இவர்களுக்கு உண்டு.

சைவமும் தமிழும் தழைத்து இனிதோங்கச் செய்வது மட்டுமல்ல. நாட்டுப் பற்றிலும் இச்சமூகத்தினர் சிறந்து விளங்கியவர்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கானாடு காத்தான் வை.சு. சண்முகம் செட்டியார் அவர்கள். செட்டி நாட்டு அரசர் நீதிக்கட்சியிலும் வை.சு. சண்முகம் அவர்கள் காங்கிரஸ் கட்சியிலும் பற்றுக் கொண்டவர்கள். இருவரும் ஒரே ஊரில் அடுத்தடுத்த தெருக்களில் வாழ்பவர்கள். 1927ல் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்த பொழுது செட்டிநாடு சென்று கானாடுகாத்தான் வை.சு. சண்முகம் இல்லத்தில் இராஜாஜியுடன் தங்கியிருந்த செய்தி நகரத்தார் வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்று.

வை.சு. சண்முகம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாகப் பணிபுரிபவர். தனவைசிய ஊழியர் சங்கமொன்றைத் தமிழ்க் கடல் ராய சொக்கலிங்கம், சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிர மணியம், காசிச் செட்டியார், காந்திமெய்யப்பன் முதலிய நண்பர்களின் துணைகொண்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருமை அவருக்கு உண்டு. அடுத்து இப்பெரு மக்களால் தோற்றுவிக்கப் பெற்றதும் தேசியகவி