பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

11 "அஞ்சா நெஞ்சர் வை. சு"

இராம சுப்பிரமணியம் (நீலாவதி)

(இராம சுப்பிரமணியம் அவர்கள் தம் துணைவி யார் நீலாவதி அம்மையாருடன் சுயமரியாதை இயக்கத்திலும் பேராயக் கட்சியிலும் உண்மை யாகத் தொண்டு செய்தவர். சண்முகனாருடன் ஒன்றிப்பழ கியவர். அன்றைய நிகழ்ச்சிகளை இக்கட்டுரை வாயிலாக நினைவு கூர்கிறார்.)

தமிழ் நாட்டில் நகரத்தார் வாழும் கானாடுகாத்தானில் சீர்திருத்த வாலிபர்களுக்கு ஓர் இரும்புத் தூணாக இருந்தவர் அமரர் வை.சு. சண்முகம் ஆவார். தனவணிக நாட்டில் அரை நூற்றாண்டுக்கு முன் சீர்திருத்தத் துறையில் ஆர்வம் காட்டிய இளைஞர் வரிசையில் சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியம், ராய சொக்கலிங்கன், மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார், (சொ. முருகப் பரின் குரு) இராமச் சந்திரபுரம் சு. பழநியப்பா, தேவகோட்டை அ.வெ. தியாகராஜா போன்றவர்களின் வரிசையில் முதலிடம் பெற்ற தியாகச் செம்மல். வை.சு. சண்முகம் ஆவார்.

உளுத்துப் போன நிலையிலிருந்த 96 ஊர் நகரத்தார் சமூகப் பழக்க வழக்கங்களைச் சீர்திருத்தி வைக்க அஞ்சா நெஞ்சுடன் போராடினார்.