பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

123

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் தலைசிறந்த தமிழறிஞர்கள், கவிஞர்களின் புரவலராகவும் கம்பீரத்தின் சின்னமாகவும் வாழ்ந்தவர்.

மகாகவி பாரதியாரை இன்று போற்றும் தலைவர்களும் பிறரும் அன்று புறக்கணித்து ஒதுக்கிய காலத்தில் அவருக்கு உதவி செய்து, வேண்டிய பொருளும்கொடுத்துக் கைதூக்கி விட்டவர் அருமை அன்பர் வை.சு. சண்முகம் ஆவார்.

1919-ம் ஆண்டு பாரதியார் கானாடுகாத்தான் வை.சு. சண்முகனார் வீட்டில் தங்கிய பொழுது "கானாடு காத்த நகர் அவதரித்தாய் சண்முகனாம் கருணைக் கோவே" என்று பாடியுள்ளார். மேலும் "செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர் விளக்கே" என்றும் பாடியிருக் கிறார்.

திருச்செந்தூர்ப் பக்கமுள்ள சேரமாதேவி என்ற ஊரில் தேசபக்தர் வ.வெ.சு. ஐயர்அவர்கள் காந்தீய முறையில் ஒரு குருகுலம் ஆரம்பிக்க எண்ணியபோது, அதற்கு நிலம் வாங்கிக் கொடுத்த பெருமை அமரர் வை.சு. சண்முகனாரையே சேரும். அதோடு மட்டுமல்ல குருகுலம் கட்டிடம் கட்ட வை. சு.ச. மலேயா சென்று நன்கொடை யாகப் பொருள் சேர்த்துச் சுமார் 35,000 வெள்ளி சேர்த்தார். குருகுலம் காந்தீய முறையில் சரியாக நடைபெறவில்லை என்றும் சாதி பிரித்துச் சாப்பாடு போடப்பட்டது என்றும் தெரிந்தது. மலேயாவில் திரட்டப் பட்ட நன்கொடைப் பணத்தைக் கொடுத்த வர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட வேண்டுமென்று திரு.வி.க. சேலம் டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, சொ. முருகப்பா, ராய சொ., சுரேந்திரநாத் ஆரியா,