பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

126 சீர்திருத்தச் செம்மல்

"தனவைசிய இளைஞர் சங்கம்" என்ற பெயரில் திரு. வை.சு. அவர்களும் மற்ற பெரியவர்களும் ஒரு சங்கம் அமைத்திருந்தார்கள். திரு. சொ. முருகப்பா, திரு. ராய. சொ. திரு. பிச்சப்பா சுப்பிரமணியம் போன்றவர்களும் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள். அந்தச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஒரு சுவையான நிகழ்ச்சியை இங்குக் குறிப் பிட்டாக வேண்டும்.

அப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார் தான் பெண் வீட் டாருக்குத் திருமண நேரத்தில் பணம் கொடுக்க வேண்டும். இப்போது நடைமுறையில் உள்ள வரதட்சணைக்கு நேர்மாறான நிலை அது. அதாவது 'பெண் தட்சணை!' எப்படியாகிலும், பணம் கொடுத்து மணம் புரிவது சமூகக் கொடுமைதானே, ஆகவே அதை எதிர்த்துத் தனவைசிய சங்கத்தின் சார்பில் திரு. வை.சு. ஒரு போராட்டத்தைத் தொடங்கினார். அவ்வாறு நடக்கும் திருமண வீடுகளின் முன்பு, முதல் நாளே தொடங்கி ஒரு மறியல் போராட்டம் நடத்துவதே சங்கத்தின் திட்டம்.

முதலில், நச்சாந்துபட்டி என்னும் ஊரில் நடைபெற்ற ஒரு பணக்காரன் வீட்டுத் திருமணத்தில் போராட்டம் தொடங்கி னோம். இளைஞனாக இருந்த நானும் அப்போராட்டத்தில் கலந்து கொண்டேன். திருமணத்திற்கு முதல் நாளே, நாங்கள் நச்சாந்து பட்டிக்குப் புறப்பட்டு விட்டோம். அங்கு போய்ச் சேரும்போது இரவாகி விட்டது. இரவு முழுவதும் திருமண வீட்டிற்கு முன் நின்றுகொண்டு முழக்கமிட்டோம்; மறியல் செய்தோம். "பெண்ணை வளர்த்துக் காசுக்கு விற்பதா?" என்ற முழக்கம் இன்னும் என் நினைவில் உள்ளது.