பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 127

திருமணம் நடத்திய அப்பணக்காரனும் எங்களுக்குப் பணிவதாக இல்லை. வேலைக்காரர்களை வைத்து முற்றம் நிறையத் தண்ணீரை இறைத்துக் கட்டி வைத்து, திடீரென்று திறந்து விட்டுவிட, நாங்கள் நின்று கொண்டிருந்த இடம் முழுவதும் தண்ணீர். எங்களை அங்கிருந்து விரட்டவே அந்த ஏற்பாடு. ஆனால் நாங்களும் அங்கிருந்து நகர்வதாக இல்லை. ஆளுக்குப் பத்துச் செங்கற்களை எடுத்துக் கொண்டு வந்து போட்டு, அவைகளின் மேல் நின்று கொண்டு மீண்டும் முழக்கமிட்டோம். அடுத்த நாள் முகூர்த்த நேரம் தவறிப் போய், பிறகுதான் திருமணம் நடந்து முடிந்தது. இப்படி ஒரு போராட்டத்தை அன்றைய செட்டிநாடு பார்த்ததே யில்லை.

"முத்தமிழ் நிலையம்" என்ற பெயரில் ஒரு பதிப்பகம் நிறுவி புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் நூல்களையெல்லாம் திரு.வை.சு. அவர்கள் வெளியிட்டார்கள். கவிஞருக்கும் அவருக்கும் இடையில் மிக நெருக்கமான நட்பும்இருந்தது; இடையில் ஒருமுறை சண்டையும் வந்தது. எல்லாவற்றிற்கும் நான் சாட்சியாய் இருந்திருக்கிறேன்.

நினைத்துப் பார்க்க, நினைத்துப் பார்க்க, திரு. வை.சு. அவர் களோடு இணைந்திருந்த காலத்து நிகழ்ச்சிகள் பல நினைவுக்கு வருகின்றன. எல்லாவற்றையும் ஒரு கட்டுரையில் எழுதிவிட முடியாது.

திரு வை.சு. அவர்களின் முதல் மனைவி கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்த போது, தாயாய், மருத்துவராய், செவிலியாய் திரு. வை.சு. ஆற்றிய தொண்டு மிக அரியது. நாட்டுத் தொண்டைப் போலவே, வீட்டுக் கடமைகளிலும் தவறாதிருந் தார்கள்.