பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

136 சீர்திருத்தச் செம்மல்

தலைப்பில் அக்காலத்தில் தமிழிசைக் காகத் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டார்கள்.

"தமிழ்நாடு வானொலி கேட்போர் கழகம்" (Tamil Nadu Radio Listeners Association) என்ற அமைப்பினை உருவாக்கித் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் தமிழ்ப் பாடல்கள் ஒலிக்க வேண்டும் என்று கடிதங்களை எழுதியனுப்பிய வண்ணம் கிளர்ச்சி செய்தார்கள்.

பொதுப் பணிகள்

வை.சு.ச. அவர்கள் இராமநாதபுர மாவட்டக் காங்கிரசின் தலவராகவும், அனைத்திந்தியக் காங்கிரசுக் கமிட்டியின் உறுப்பின ராகவும், சுயமரியாதை இயக்கத்தின் பொருளாள ராகவும் இருந்து பொதுப் பணியாற்றினார்கள்.

ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அயல் நாட்டுத் துணிகளை ஒழிக்கும் திட்டத்தின் கீழ், தம் இல்லத்தி லிருந்த ஏராளமான துணிகளை எடுத்து வந்து, காரைக்குடி மகார் நோன்புத்திடலில் (காந்தி சதுக்கம்) எரித்து அரசியல் விழிப்பினை அன்று ஏற்படுத்தினார்கள்.

வை.சு.ச. தம் வீட்டு இன்ப துன்ப நிகழ்ச்சிகளில் ‘சமபந்தி போஜனம்’ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே நடத்தி வந்தார்கள். அக்காலத்தில் இது புரட்சியாக விளங்கியது.

காரைக்குடி இந்து மதாபிமான சங்கத்தைத் தோற்றுவித்த வர்களில் வை.சு.ச. வும் ஒருவராவார்.