பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 137

நகரத்தார் சமுதாயத் தொண்டு

சண்முகனார், மாறிவரும் உலகச் சூழ்நிலையை அன்றே உணர்ந்து, நகரத்தார் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான தடை களை ஆராய்ந்து, எதிர்ப்புகளுக்கும் ஏச்சுகளுக்கும் கேலி களுக்கும் மத்தியில். சமூகப் புரட்சிக்கு முன்னேற்றத்துக்கு - மனமாற்றத்துக்கு வித்திட்ட நல்லவர்; வைர நெஞ்சம் படைத்தவர்.

எதிர்காலத்தில் சமூகம் சந்திக்கப்போகும் தீமைகளை - சோதனை களை - பிரச்சனைகளை உணர்ந்து, அவற்றை வருமுன் காக்கச் சண்முகனார் போன்ற பெரு மக்கள் உழைத்துங் கூட அவர்தம் முயற்சி முழு வெற்றி பெறவில்லையே!

நகரத்தார் சமூகப் பெண்களின் எண்ணிக்கை அந்நாளிலேயே வளர்ந்து வருவது கண்டு, திருமணம் ஆகாத பெண்களின் நிலை பற்றிச் சண்முகனார் காணும் பிரமுகர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி வருந்தினார்கள். இதற்கு மன மாற்றமும் கூட்டு முயற்சியும் பலன் தரும் என்று நம்பினார்கள். இதன் பொருட்டுத் தொண் ணூற்றாறு ஊர் நகரத்தார் கூட்டத்தைக் கோவிலூரில் கூட்டி, ஒற்றுமையை வலியுறுத்தினார்கள்.

லேவாதேவித் தொழில் எப்படியிருந்தது? எப்படியிருக்கிறது? எப்படியிருக்க வேண்டும்? என்று, கூட்டு முயற்சியை வலி யுறுத்திப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சிறு நூலை வை.சு. அவர்கள் எழுதினார்கள்.

உயரிய குணங்கள்

“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு”