பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

138 சீர்திருத்தச் செம்மல்

என்ற வள்ளுவப் பெருந்தகையின் கொள்கையை இறுதி வரை இலட்சியமாகக் கொண்டு ஒழுகி வந்தார்கள்.

வை.சு. அவர்கள் நொடித்துத் துன்புற்றிருந்த காலத்தில் ஒரு பிரமுகர் வந்திருந்தார். வந்தவர், ‘உங்களை வெளியே பார்க்க முடிய வில்லையே?’ என்று கேட்டார். ‘இது உற்சவ விக்கிரக மல்ல; மூலவிக் கிரகம்; வெளியே வராது’ என்று சுவைபட விடை தந்தார் சண்முகனார்.

“நன்றே நினைமின்; நமனில்லை” என்ற திருமூலர் வாக்கில் ஒன்றிய ஐயா அவர்களின் பேச்சில் கனிவிருக்கும்; உறுதியிருக்கும்; கம்பீரமும் கலந்திருக்கும்; தோற்றத்தில் எளிமையிருக்கும்; ஏற்றமும் இணைந்திருக்கும். எண்ணத்தில் துணி விருக்கும்; தூய்மை யுடன் தெளிவும் தொடர்ந்திருக்கும்.

தெய்வ பக்தி குறைந்தாலும் மறைந்தாலும் நாடு சிறக்காது. எத்தனை வளம் பெருகினாலும் அது நிலைக்காது; நிரக்காது. போலிப் பக்தியினால்தான் உண்மை பக்தி கேலிக்கு இடமாக அமைந்தது என்ற உறுதியான கருத்து வை.சு.வுக்கு உண்டு.

துன்பங்கள் அணிவகுத்துச் சூழ்ந்த போதும், சுடச்சுட ஒளிரும் பொன் போலத் தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக் கையும் குறை யாமல், நெஞ்சுறுதியுடன் வாழ்ந்த பெரு மகனாரின் எண்ணமும் வாழ்வும் நமக்கு வழிகாட்டுமாக.

இனி, ஐயா அவர்கள் என்னை ஆளாக்கிய முறைப் பற்றி இரண்டொன்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

நாங்கள் குழந்தைகளாக இருந்தபொழுது ஒருநாள் விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுக்