பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலையொடு மோதிய மாவீரன் பாவலர்மணி ஆ. பழகி (சண்முகனாரைப் பாவலர் மணி கண்டறியார் எனினும் கண்டனைய கவிதைகள் தந்துள்ள்ார்.) 1. கானாடு துறவியரும் கலைநாடு புலவர்களும் களித்துக் கூடித் தேனாடு தும்பியெனத் திகழ்ந்தாடும் பெற்றியநின் திருவோ லக்கம் நானாடுங் காலமிலேன் என்றாலும் நயனுடையார் நவின்ற கேட்டுப் பூநாடு சொல்மலரால் புகழ்மாலை தொடுக்கின்றேன் புகழின் மிக்கோய் ! 2. திருமுகத்தைக் கண்டறியேன்; தெளிந்தமொழி கேட்டறியேன், கவலை தோய வருமுகத்தைக் கண்டவரின் வாட்டத்தைப் போக்கியநின் வளமை காணேன்; பொருமுகத்தைக் கண்டறியான் புகழ்ப்பரணி பாடுவனோ ? பொருளி லாய் நான் ! வெறுமுகத்தல் அளவையினால் மேலாழி நீரளக்க மேவி நின்றேன்.