பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 3. செட்டிமக்கள் குலவிளக்கே என உன்னைச் சிறப்பித்தான் திங்கள் போலும் எட்டைய புரக்கவிஞன்; எதனைக்கண் டிவ்வண்ணம் இயம்பி னானோ ? மட்டின்றி வழங்குவதில் மாபுகழைக் கொள்ளுவதில் மறந்தும் கூடச் செட்டாக வாழ்ந்திலைநீ என்பதுதான் உலகமெலாம் தெரிந்த செய்தி. 4. கொடுப்பதிலே பேரரசன்; குரலெடுத்தார் போர்மறவன்; குழலும் யாழும் எடுப்பதிலே பெரும்பாணன்; எதிரிகளை முறியடிக்கச் சொல்லாம் அம்பு தொடுப்பதிலே வல்லம்பன்; தொல்லறிவுப் பெரியாரின் சொல்லைக் காதில் மடுப்பதிலே சேர்வை; இன மானத்தைக் காப்பதிலே மழவ ராயன் ! 5. விண்முகத்துச் சென்றவனே ! விழிமுகத்து நிற்பவனே ! விரும்பு வார்தம் உண்முகத்து வாழ்பவனே ! ஒளிமுகத்துச் சுடரவனே ! உரவோர்க் காணின்