பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 கண்முகந்து கொண்டவனே ! களிமுகந்து கொடுத்தவனே ! கானாட் டண்ணல் சண்முகத்து மன்னவனே ! சரித்திரத்துக் குயிரளிக்கும் சால்புன் சால்பு. மலையோடு மோதியவன்; மடமையினைச் சாடியவன்; மகிழ்ச்சி பொங்கக் கலையோடும் கவியோடும் கலந்துருகிப் பாடியவன்; காற்ற லைக்க அலையாடும் பொழுதாடும் அசைதுரும்பு போல்கையிலும் ஆர்த்தெ ழுந்து மலையோடு மோதியகின் மாவீரம் மன்பதைக்கே வழிகாட் டட்டும். அறத்திற்கே அறமானாய் ! அன்பிற்கே அன்பானாய் ! அறிவு சான்ற திறத்திற்கே திறமானாய் ! தெளிவுக்கே தெளிவானாய் ! தேய்த லில்லாப் பொறுத்துக்கே பொறையானாய் பொருளுக்கே பொருளானாய் ! போர்மு கத்தில் மறத்திற்கே மறமானாய் ! மனபதைக்கே உயிரானாய் ! மறக்கப் போமோ ?