பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

152 சீர்திருத்தச் செம்மல்

பாதையிலும், அச்சப்படும் செயல்கட்கு அச்சப்படும் படியும், "இச்சகத்திலுள்ளோரும் எதிர்த்து நின்ற போதிலும் அச்சமில்லை அச்ச மில்லை" என்ற பாரதி கூற்றுப் படி, என்ன இடையூறு, பகை வந்தாலும் நல்லதைச் செய்ய, நீதியை நிலை நாட்ட, உண்மையை வெளிக்கொணர முயலவும் எங்களைப் பழக்கினார்.

எங்கள் பள்ளிக்கூடப் பருவ நாளில், 'இன்ப மாளிகைக்கு' வரும் அறிஞர்கள், தலைவர்கள், சித்தர்கள், ஞானிகள், சிநேகிதர்கள், எல்லாரும் எங்களைப் பார்த்துப் பிரமித்துப் போவார்கள். இந்தக் குழந்தைகள் எவ்வளவு அறிவோடு, சுறுசுறுப்போடு, பணிவு, மரியாதையுடன் உள்ளார்கள்! என வியந்து எங்கள் ஐயா அவர் களையும், ஆயாள் அவர்களையும் பாராட்டி என்னையும் என் தங்கைகளையும், எங்கள் அம்மான் மக்களையும் பாராட்டி எங்களுடன் அளவளாவி மகிழ்ந்து, பாரதியார், பாரதிதாசன் பாடல்களை நாங்கள் பாடுவதையும் இரசித்துப் பாராட்டி விடை பெறுவர்.

எங்கட்குள் சண்டைகள் வந்து அறியோம். போட்டி, பொறாமைக்கு அர்த்தம் தெரியாது. மிகுந்த தைரிய சாலி களாக வளர்க்கப் பட்டோம். நாங்கள் எதையாவது பார்த்து அல்லது கேட்டுப் பயந்தாலும், எங்களின் பயத்தின் அடிப் படையைக் கூர்மையாக ஆராய்ந்து ஒரு நொடியில் ஆதார பூர்வமாகச் செயலிலோ, சொல்லிலோ காட்டி, நாங்கள் பயந்ததற்கு நாங்களே வெட்கப்படும் படி செய்வார்கள். தைரியம் ஆயுள் பரியந்தம் எங்கட்குக் கை கொடுக்கும்படி எங்களை ஆக்கினார்கள். கட்டுப்பாடாக, சுதந்தர மாக எங்களை வளர்த்து, அறிவையும், ஆராயும் ஆற்றலையும் எங்கட்கு ஊட்டினார்கள்.