பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 155

கடத்துபவர்கள் இருப்பதால் தானே இந்தச் சுங்கச்சாவடி. உள்ளதைக் கொண்டு நேரான பாதையில் நடந்தால் எவ்வளவோ மேன்மையாக இருக்கலாமே" என்றார்.

ஐயா அவர்களின் பார்வை, கம்பீரம், முகம் இவற்றைக் கண்ட சில வினாடிகளிலே, அவர்களின் அகம் அப்படி இருக்கும் என்பதை, அந்த கஸ்ட்டம்ஸ் அதிகாரிகள் அறிந்து கொண்டு, சுத்தமான, சத்திய மான, நேர்மையான காந்தீய வாதியாகிய எங்கள் ஐயா அருகில் வந்து சோதனை செய்யாத தோடு, ஐயாவுக்கு மரியாதையும் செலுத்திச் சென்றார்கள்.

நாங்கள் பள்ளிகளில் கற்றதைவிட யாருக்கும் கிடைத்தற் கரிய எங்கள் ஐயா அவர்களின் மூலம் கற்றது கடல் அளவு. அதுதான் இன்று எங்கட்குக் கை கொடுக்கிறது. ஐயா அவர் கட்கு எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு இருந்தது. உலக ஆசா பாசங்களைத் துறந்த சாமியார்களி லிருந்து, ஞானிகள், சித்தர்கள், தேசத் தலைவர்கள், தேச பக்தர்கள், கவிஞர்கள் என இன்ப மாளிகைக்கு வந்து செல்லாத வர்கள் இல்லை.

ஐயா அவர்கள், ஊருக்கே, நாட்டுக்கே எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள். ஐயா அவர்கள் ஒரு தலைசிறந்த ஆசிரியராகவும், சிறந்த மருத்துவராகவும், சிறந்த மேதையாகவும், கருணை வள்ள லாகவும், சிறந்த தியாகியாகவும், முடிந்தவரை துன்பம் உற்றவர் கட்கு உதவிக்கரம் நீட்டித் துன்பத்தைப் போக்குபவ ராகவும், எல்லார் குடும்பத்தையும் தன் குடும்பம் போலப் பாவித்தவர் களாகவும், "தனக்கு, நான்" என்ற சொற்களுக்கு அர்த்தம் தெரியாத வர்களாகவும் பகைவனுக்கு அருளும் நன்னெஞ்சு உள்ளவர் களாகவும், நல்லதைச் செய்ய, நீதியை நிலைநாட்ட, குற்றங் களைக்