பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

156 சீர்திருத்தச் செம்மல்

களைய, நேர்மைக்குச் சோதனை வரின் எது வந்தாலும் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துச் சமாளித்து வெற்றி காணும் தன்மை உடையவர்களாகவும், வாழ்ந்து, எல்லா நல்ல தன்மைகட்கும் ஒட்டுமொத்தமாக விளங்கிய ஒரே நபர் ஐயா அவர்கள்.

ஈ.வெ.ரா. ஐயா அவர்கள், அறிஞர் அண்ணாத்துரை அவர்கள், ஜீவானந்தம் ஐயா அவர்கள், பாரதிதாசன் அவர்கள், கவிஞர் முடியரசன் அவர்கள் எல்லாம் இன்ப மாளிகைக்கு வந்து போனது இன்றைக்கும் எனக்கு நினைவு உள்ளது. சீமான் வீட்டுப்பிள்ளை எங்கள் ஐயா. தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்ளாமல், கடைசியில் இன்ப மாளிகையும் போய், எல்லார்க்கும் கைகொடுத்த எங்கள் ஐயாவுக்கு ஆயிரம் கஷ்டம் வந்து, உடலும் மனமும் எய்த்து, சாதாரண வீட்டுக்கு மாறிவந்த சில வருடங்களில் இவ்வுலக வாழ்க்கையை விட்டு விடை பெற்றார்கள். என்றாலும் எங்கள் ஐயா அவர்களின் புகழும், கொடையும், தியாகமும் தேசத்தொண்டும் 'வை.சு.' என்றாலே எல்லாரும் புரிந்து கொள்ளும் அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன.

எனக்கு மகன் பிறந்து, குழந்தையுடன் நான் சிங்கப்பூர் புறப் பட்ட போது எங்களை வழிஅனுப்ப எங்கள் ஐயா அவர்களும், ஆயாள் அவர் களும் சென்னைத் துறைமுகம் வந்து எங்களை வழியனுப்புகையில் நான் அவர்களைப் பார்த்துப் பார்த்து அழ, பிரியா விடைக்கு அழ, என் ஐயாவின் உடலும், வலுவும் எய்த்துள்ள தற்கு மேலும் அழ, இனி மீண்டும் சிங்கப்பூரிலிருந்து நாம் திரும்பி வரும்போது, பல ஆயிரம் பேருக்கு நிழல் தந்த இந்த ஆலமரம் இருக்குமா என