பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

167

மழுங்க வழித்துத் தான் இருப்பர். கழுத்தில் பட்டுக் கயிற்றில் ஓர் உருத்திராட்சம் கோத்துக் கட்டி யிருப்பர். பிற்காலத்தில் தங்கச் சங்கிலியில் உருத்திராட்சம் கோத்துக் கட்டியிருப்பர். இதற்குக் 'கெவுடு' என்று பெயர் சொல்வார்கள். இந்தக் கோலமுடையவர்களை யார் கண்டாலும் 'இவர் செட்டி யார்' என்று பார்த்த விநாடியே தெரிந்து கொள்வார்கள். நெற்றி நிறையத் திருநீறும் பூசியிருப்பர்.

தந்தையாரும் தனவைசிய ஊழியர் சங்கத்தினரும் முதன் முதலில் 'கிராப்' வைத்துக் கொண்டவர்களாம். சமூகப் பெரியவர்கள், இந்த இளைஞர்களைத் திட்டோ திட்டென்று திட்டுவார்களாம், பிறகு வெகு விரைவிலேயே எல்லா நகரத்தார் ஊர்களிலும் உள்ள அத்தனை இளைஞர்களும் 'கிராப்' வைக்கத் தொடங்கி விட்டார் களாம்.

துணிவுள்ளம்

ஓர் அலமாரி முழுவதும் மருந்துகள், பஞ்சு, மாத்திரை உரைக்கும் கல், தைலங்கள், தேள் கடிக்கு மருந்து முதலானவை நிறைந்திருக்கும். அந்த அலமாரிக்கு மருந்து அலமாரி என்றே பெயர். அக்காலத்தில் ஏழை எளிய மக்கள் அவசரத் தேவைக்கு நள்ளிரவில் கூட இவர் களிடம் வருவார்கள். மருந்து சாப்பிட்டோ வாங்கிக் கொண்டோ செல்வார்கள்.

ஒரு சமயம் பாம்புப் பிடாரன் ஒருவன் வந்தான். வேரின் அடிப்பாகம் போன்ற சில துண்டுகளைக் காட்டி, 'பாம்பு கடித்தால் உடனே விஷத்தை இறக்கிவிடும் இந்த வேர்' என்று கூறி விலைக்கு வாங்கிக் கொள்ளச் சொன்னானாம். அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய