பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

158 சீர்திருத்தச் செம்மல்

தந்தையார், பிடாரனிடம், 'உன் பாம்பைக் கொத்த விட்டு, உன் மருந்தினால் விடத்தை இறக்கி விடு பார்ப்போம்' என்று கையை நீட்ட பாம்பு கை விரலில் கொத்தியது. பிடாரன் வைத்திருந்த வேர் பயனளிக்கவில்லை. விடம் தலைக்கேறி, வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்து விட்டார்.

தற்செயலாக வந்த பாட்டியார், பிடாரனைக் கண்டதும் நிலைமையை ஊகித்து அறிந்து கொண்டார். அதற்குள் பிடாரனும் ஓடி விட்டான். தந்தையாரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றார்கள். அந்த நேரத்தில் வழக்கத்துக்கு மாறாக மருத்துவரும் அங்கிருந்தார். மாற்று ஊசி, மருந்து மூலமாக எமன் பிடியிலிருந்து தந்தையார் மீட்கப்பட்டார்கள்.

குறிப்பெழுதும் பழக்கம்

வரகவி சுப்பிரமணிய பாரதியாருடன் தந்தையாருக்குத் தொடர்பு ஏற்பட்டது. 1918 அல்லது 1919 ஆம் ஆண்டு என்று கருதுகிறேன். அப்பொழுது தந்தையாரவர்களுக்கு வயது இருபத்து மூன்று இருக்கலாம். அவர்கள் காங்கிரசில் எந்த ஆண்டு சேர்ந்தார்கள் என்று தெரியவில்லை. 1914 ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தே நாள் குறிப்பு எழுதும் பழக்கம் அவர்களிடமிருந்தது. இறுதிக் காலத்தில் நோயில் படுக்கும் வரை தொடர்ந்து எழுதி வந்தார்கள்.

இப்பொழுது அக்குறிப்புகள் இருக்கும் இடம் தெரிய வில்லை. அவை கிடைத்திருந்தால் தமிழ்நாட்டில் - குறிப்பாகச் செட்டி நாட்டில் காங்கிரசு பரவியது. அதற்காக அவர்கள் ஆற்றிய பணிகள், சுயமரியாதை இயக்கத்தினால் செட்டிநாட்டில் ஏற்பட்ட புரட்சிகரமான