பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 175.

அந்தச் சமயங்களில் தந்தையார் தாயாருக்குச் செய்யும் பணிவிடை களை எந்தக் அந்தக் காலத்தில் பெண்கள் ரவிக்கை அணிய மாட்டார் களாம். தந்தையார் சொற்படி ரவிக்கை அணிந்தார்களாம். கதராடை கட்டச் சொன்ன போது எந்தத் தயக்கமும், மறுப்பும் காட்டாது சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டார்கள். தந்தையாரவர்கள் கார் ஓட்டும் போது அருகில் முன் சீட்டில் உட்காரச் சொன்னபடி உட்கார்ந்து செல்வார்களாம். இதைப் பார்த்து ஆச்சிமார்கள் எல்லாம் கேலி செய்வார்களாம். தாயார் அவர்கள் இதைப் பொருட்படுத்தியதில்லை.

இதே போல் அந்தக் காலத்தில் பெண்கள் கணவருடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடமாட்டார்கள். ஆனால் இவர்கள் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஒரு சமயம் வீட்டுக்கு வந்திருந்த சகோதரிகளை கொழுந்திமார்களை ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கூப்பிட்ட பொழுது, அவர்கள் கண்டிப்பாக மறுத்துவிட்ட நிலையில், தாயார் தயங்கிப் "பிறகு அவர்களுடன் சாப்பிடுகிறேன்" என்று கூறத் தந்தையாருக்கு கோபம் வந்து "வேலையாட்களுடன் (அதாவது சமையல் ஆள், கார் டிரைவருடன்) ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடு வீர்கள். கணவர், அண்ணனுடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட மாட்டீர்கள்! எப்பப் புத்திவரப் போகிறதோ" என்று கூறிவிட்டுத் தாயாரைப் பார்க்க, தாயார் பரிதாபமாகப் பார்க்க அன்று தந்தையார் மட்டும் உணவருந்திச் சென்றார்கள். ஆனால் அடுத்த முறை வந்திருந்த பொழுது இப்படி நடக்க வில்லை. தந்தையார் பிள்ளைகள் தாயார் ஒரு புறமும், சற்றுத் தள்ளி பக்க வாட்டில் தங்கைகள், கொழுந்திமார்கள் அனை வரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள்! இதெல்லாம் சுமர் 60 வருடங்கட்கு முன்பு நடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இதர ஆச்சிமார்களும், உறவினர்களும் எங்கள் அருமைத் தாயாருக்கு வைத்த பெயர் "அவள் புரியாதவள்." 'அவளுக்கு ஒன்றுமே தெரியாது' என்றும் 'ஆம்பிளையான் சொன்னால் என்ன? இப்படியா நடப்பது' என்றும் உறவினர் கூறுவதுண்டு. தாயைப் பெற்ற பாட்டியும் கூட 'ஆம்பிளையான் சொன்னால் என்ன? இவளுக்குப் புத்தி எங்கே போச்சு? அவர்கள் (கணவர்) சொல் வதைக் கேட்டு இவளும் சேர்ந்து ஆடுகிறாளே! எல்லாரும் கூடிக் கேலி செய்கிறார்கள்' என்று கூறுவதை நான் பல முறை என் காதாரக் கேட்டுள்ளேன். தாயார் அடிக்கடி நோய் வாய்ப்பட்டார்கள். அந்தச் சமயங்களில் தந்தையார் தாயாருக்குச் செய்யும் பணிவிடை களை எந்தக் கணவரும் இவ்வளவு அன்பு சிரத்தையுடன் செய்ய முடியாது.