பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

176 சீர்திருத்தச் செம்மல்

கணவரும் இவ்வளவு அன்பு சிரத்தையுடன் செய்ய முடியாது.

தாயாரவர்கட்கு, கணவர் தெய்வமாகக் காட்சியளிப்பார். அவர்கள் கணவரை வீட்டிலுள்ளோர் குறை சொன்னால் "நல்லா இருப்பீர்கள் அங்கிட்டுப் போய்ப் பேசுங்கள்" என்று கூறி விடுவார். அல்லது இவர்கள் வேறு பக்கம் சென்று விடுவார்கள். மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்தார்கள். தாயார் அவர்கள் அவர்களின் 39, 40 வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். "என் சொல்லுக்கு மறுவார்த்தை அவள் கூறின தில்லை" என்று தந்தையார் பிறரிடமும், எங்களிடமும் கூறுவதுண்டு. அவர்களின் மறைவுக்குப் பின்னர் வாழ்க்கைத் துணைவியாக வந்த திருமதி மஞ்சுளாபாய் அம்மை யார வர்களும் தந்தையார வர்கட்கு முழு ஒத்துழைப்புக் கொடுத்து வாழ்ந்து வந்தார்கள். தந்தையாரவர்கள் எப்பொழுதும் அவர் களை நீங்கள் என்று தான் பன்மையில் அழைப்பார்கள். சிற்றன்னையார் அவர்களும் மகன், மகள் முறை உள்ள எங்களைத் தம்பி, தங்கச்சி என்று சொல்லி "நீங்கள்" என்றே பன்மையில் சொல்லுவார்கள்.

குழந்தை வளர்ப்பு

இவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறை அலாதியானது. நாங்களும், அத்தை மக்களும் சிறுவயதினராக இருக்கும் போதும் மருந்துகள், குறிப்பாக மாதம் ஒரு முறை விளக்கெண்ணெய் சாப்பிடக் கொடுப்பார்கள். நாங்கள் தயங்குவோம். தந்தையார் முகம் மாறாமல் விளக்கெண்ணெயை விட்டு, விட்டுச் சப்பிச் சப்பிச் சாப்பிட்டுக் காட்டுவார்கள். இதைப் பார்த்தவுடன் ஒரு தைரியம் ஏற்பட்டு, நாங்களும் மட, மடவென்று ஒரே