பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 177

வாயில் குடித்து விடுவோம். விட்டு, விட்டுச் சப்பிச் சாப்பிட எங்களால் முடியாது! அதே போல் காலில், முள் குத்தி விட்டால் அதை எடுக்க காலைக் கொடுக்கச் சம்மதிக்க மாட்டோம். அவர்கள் உடனே ஒரு குண்டூசியை எடுத்து "இப்பப் பாருங்கள், நான் அழுகிறேனா, வலிக்கிறது என்று முகத்தைச் சுளிக்கிறேனா" என்று கூறி அவர்கள் காலில் சிறிது ரத்தம் தெரியக் கூடிய அளவு ஆழமாகக் குத்திக் கொண்டு காட்டுவார்கள். இதைப் பார்த்துப் பிள்ளைகளாகிய நாங்கள் எங்கள் காலைக் கொடுத்து விடுவோம். சுலபத்தில் முள்ளை எடுத்து விடுவார்கள்.தினசரி பிரார்த்தனை, உத்தேச வருடம் 1926-ஐ அனுசரித்து இருக்கும்.

நானும் அண்ணனும் சிறு பிள்ளைகளாக இருந்த பொழுது 5.30க்கு எல்லாம் எங்களை எழுப்பி விடுவார்கள். 6 மணிக்குத் தந்தையார், தாயார், அண்ணன், நான் ஆக நான்கு பேரும் ஒன்றாக உட்கார்ந்து பிரார்த்தனை செய்வோம். அவையாவன:-

1.என் வாழ்வுக்கும், தாழ்வுக்கும் காரணமாக இருப்பது என் மனப்பான்மைதான்.

2.இன்பத்துக்கும், துன்பத்துக்கும் அடிமையாகிவிட மாட்டேன், எனக்கு வேண்டுவது எல்லாம், திடமான, மாறாத ஊக்கமே.

3.சுறுசுறுப்பும், உயர்வு தாழ்வு கருதாது வேலை செய்யும் குணமும் வேண்டும்.

4.எண்ணங்கள் செயலில் வருமாறு செய்தலே உத்ஸாகமாக இருப்பதற்கு வழி.சீ.一12