பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

180 சீர்திருத்தச் செம்மல்

வேண்டும்" என்ற நிபந்தனை யைப் போடுவார்கள். இந்த நிபந்தனைகளைக் கேட்டு, இவர்களைப் போற் பொருள் வசதி படைத்தோர் இதற்குச் சம்மதிக்கவில்லை.

ஆனால் தந்தையோ கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தயாரில்லை. தன் ஒரே மகளுக்குப் பண வசதியுள்ள இடம் அமையாவிட்டாலும் பரவாயில்லை. தன் கொள்கைக்கு ஒத்து வருகிற ஓர் படித்த பையனாகப் பார்த்துத் திருமணம் செய்து விடுவோம். விவகாரத்தில் உள்ள சொத்துகள் தனக்கு அனு கூலமாகக் கிடைத்து விடும். உண்மையான உரிமை இவர் கட்குத் தான். அப்படிப் பணம் வந்தவுடன், ஆண் மகனுக்கும், பெண் மகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவோம். தன் மகளுக்கும் இதனால் வசதி கிடைத்து விடும் என்று எண்ணி, அதன்படியே இந்த நிபந்தனைகளுக்குச் சம்மதித்த குடும்பத்தில் திருமணம் செய்விக்கப்பட்டது.

இத்திருமணம் அந்தக் காலத்தில் 1935-ல் செட்டி நாட்டையே ஒரு குலுக்குக் குலுக்கி விட்டது. பெரிய பரபரப்பை, பெரிய எதிர்ப்பை உண்டாக்கிய ஒன்று. அந்தக் காலத்தில் செட்டிய வீட்டில் திருமணம் 6 நாள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சடங்கு நடைபெறும். பெண்ணுடைய ஊருக்கு மாப் பிள்ளை வீட்டார், உறவினர் பங்காளிகளுடன் வருவர். அவர்களுக் கென்று பெண்ணுடைய ஊரில் "மாப்பிள்ளை வீடு" என்று வாடகைக்கு அமர்த்தி இருப்பர். இதைத் தந்தையாரவர்கள் மாற்றி விட்டார்கள். கானாடு காத்தானில் உள்ள இவர்களின் மாளிகையிலேயே மாப் பிள்ளை வீட்டாரும் வந்து இறங்கினார். 6 நாள் நடைபெறும் திருமணத்தை 3 நாளாக்கினார்கள்.

சீர்திருத்த முறையில் புது மாதிரியில் செய்வதற்குப் பங்காளி களின் அனுமதி - சம்மதம் கேட்க விரும்ப