பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 181

வை. சு. சண்முகனார் 181 வில்லை. பங்காளி வீடுகள் அத்தனையும் ராயபுரத்தில் உள்ளன. திருமணத்திற்கு 2 நாள் முன்னாடித்தான் பங்காளிகளுக்கு அழைப்பு விடுக்கும் வழக்கப்படி இவர்களும் செய்தார்கள். "என் பெண்ணுக்கு என் விருப்பப்படி திருமணம் செய்வதற்கு இவர்கள்அனுமதி கேட்க அவசியம் என்ன" என்ற கருத்தில் முதலில் போய்ச் சம்மதம் கேட்கவில்லை. ஆனால் காரைக் குடியில் மாப்பிள்ளை வீட்டார் பங்காளிகளை முதலில் பார்த்துப் பேசிச் சம்மதம் பெற்றுவிட்டார்கள். ஆனால் பங்காளிகள் 6 நாள் திருமணத்தை 3 நாளாகக் குறைக்கச் சம்மதிக்கவில்லையாம். இதனால் மாப்பிள்ளை வீட்டார் "கானாடுகாத்தானில் 3 நாள் திருமணம் நடக்கிறபடி நடக்கட்டும். காரைக்குடியில் பெண் அழைத்த வீட்டில் 3 நாள் சாப்பாடுகள் வைத்துக் கொள்ளலாம்" என்று கூறப் பங்காளிகள் சம்மதம் தெரிவித்துக் கானாடு காத்தானில் நடைபெற்ற திருமணத்துக்கு வந்துவிட்டனர்.

ஆனால் பெண் வீட்டிற்கு முதல் நாள் வரும் பங்காளிகளில் இரு வீட்டார் மட்டும் முன்னாடியே வந்து விட்டனர். பங்காளிகளில் ஒரு முக்கியஸ்தரும் தந்தையாரும் எப்போதுமே ஒருவருக்கொருவர் முரணிக் கொண்டே இருப்பர். அதனால் இதை ஒரு காரணமாக வைத்து ராயபுரத்தில் அத்துணை பங்காளிகளையும் "கானாடு காத்தானுக்குத் திருமணத்துக்குச் செல்லக் கூடாது. நம்மை எல்லாம் (இவரை) மதிக்காமல், சம்மதம் பெறாமல் செட்டியவீட்டுப் பழக்கத்தையே தகர்த்து, திருப்பூட்டுச் சடங்கு செய்யாமல் மாப் பிள்ளையே பெண் கழுத்தில் தாலி கட்டுவதாம். ஐயர் வர மாட்டாராம். அதனால் இந்தக் கலியாணத்துக்கு போகக்கூடாது" என்று கூறித் தடுத்து