பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

182 சீர்திருத்தச் செம்மல்

விட்டார்கள். (ஆனால் ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தபடி திருமணத்தன்று கோயில்மாலை வந்து விட்டது.'

பங்காளிகள் வராததைத் தந்தையார் பொருட்படுத்த வில்லை. செட்டிநாட்டில் சீர்திருத்தத்தில் அக்கறை உள்ள தனவணிக இளைஞர்கள் அவர்கள் மனைவிகளுடன் பல ஊர்களில் இருந்து வந்து குழுமி விட்டனர். தந்தையாரவர் களிடம் அன்பும் மதிப்பும் வைத்திருந்த அழைப்பு அனுப்பி யிருந்த பல தனவணிக சமூகத்தைச் சேர்ந்த பெரியவர்களும் அழைப்பு இல்லாத செட்டியார்களும் கூட, "எப்படி இத் திருமணம் நடைபெறுகிறது பார்ப்போம்" என்று எண்ணி அவர்களும் வந்து விட்டனர். திருமணத்தன்று பங்காளிகள் கூட்டத்தை விட, 2, 3 மடங்கு கூட்டம் கூடி விட்டது. சர்.பி.டி. ராசன் (அப்போதைய கல்வி மந்திரி) அவர்கள் தலைமையில் பெரியார் ஈ.வெ.ரா. முன்னிலையில் எங்கள் திருமணம் நடை பெற்றது. முதல் நாளே திருமணம் பதிவு செய்தாச்சு.

எங்கள் திருமணத்துக்குப் பிறகு ஒருவாரம் பத்து நாளுக்குள் இதே முறையில் அமராவதி புதூரில் திரு. பிச்சப்பா - சுப்பிரமணியம் அவர்களின் இரண்டாவது புதல்வியின் திருமணமும் சீர்திருத்த முறையில் நடைபெற்றது. வைதீகப் பெரியவர்கள் ஆத்திரம் கொண்டு ஏற்கனவே கோவிலுக்குப் பாக்கு வைத்தும் கோவில் மாலை அமராவதி புதூர் திருமணத்துக்கு வரவிடாது தடுத்து விட்டனர். "முன்னாடி நடந்த திருமணத்தில் பெண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் கோவில் மாலை வந்துள்ள நிலையில் எங்கள் வீட்டுத் திருமணத்துக்கு மட்டும் வராமல் எப்படித் தடுக்கலாம்?" என்று திரு. பிச்சப்பா சுப்பிரமணியமும்