பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

200 சீர்திருத்தச் செம்மல்

பேசிய பேச்சும், உணர்ச்சி மிகுந்த - நடுங்க வைக்கும் தோற்றத்துடன் நெஞ்சில் பதியுமாறு சொற்களை வீசிய வீரமும், அசையாத தெய்வ நம்பிக்கையும், புலமையின் தெளிவும் எல்லோர் உள்ளத்தையும் கவர்ந்து விட்டன. தாம் இயற்றிய பாடல்களைப் பண்ணோடும் உணர்ச்சி யோடும் அவர் பாடியது கேட்டு நம் அன்பர்கள் அளவிலா மகிழ்ச்சிப் பெருக்கடைந்த பிறகு எங்களைப் புறப்பட அனுமதித்தனர்.

28.10.1919 அன்று மாலை கவியரசர் கானாடுகாத்தான் வந்து சேர்ந்தார்கள். 6.11.19 அன்று எதிர் பாராத விதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டுக் கடையம் செல்ல வேண்டும் என்றார்கள். அன்று பயணமாகக் காரைக்குடி சென்றார்கள்.

6.11.19 அன்று நம் இந்து மதாபிமான சங்கத்தின் அமைப்புக் களையும் உறுப்பினர்களின் தொண்டுகளையும் ஆர்வத்தையும் மாலை நேரில் பார்த்ததும் புனிதமான புலவரின் உள்ளம் பூரித்து விட்டது. மறுநாட் காலை அவர் செல்வதாக இருந்ததைக் கைவிட்டு விட்டார்.

நம் இந்து மதாபிமான சங்கம் மறக்க முடியாத வாழ்த்துப் பாக்களை நம் கவியரசரிடமிருந்து பெற ஓர் நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. இந்து மதப் பெருமை, இந்து மதாபிமான சங்கம் பெற்றிருந்த வளர்ச்சி, நம் உறுப்பினர்களின் பண்பாடு, ஊக்கம் அனைத்தையும் கண்டு அணு அளவும் பிழையில்லாத உண்மை களை ஒருங்கே கொட்டி வைத்திருக்கிற வாழ்த்துப் பாக்கள் அவர் மகிழ்ச்சிப் பெருக்கில் பொங்கி மலர்ந்த இளமை மணம் மாறாத பூக்களாக இன்றும் நம் உள்ளந்தோறும் மணங் கமழ்ந்து விளங்கு கின்றன.