பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 198

நம் சங்க உறுப்பினருள் எண்மர் சேர்ந்து ஊழியர் சங்கம் கண்டனர். அவர்களில் எழுவரை 27.9.19 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் நிழல் படம் பிடித்தாh. "நேற்றிருந்தவர் இன்று இல்லை என்ற பெருமையை உடையது உலகு" என்று பொய்யா மொழியார் கூறுகிற பெருமைக்கு இலக்கான உறுப்பினர் பிச்சப்பா சுப்பிரமணியம் அவர்கள் ஒருவர் என்பதை நம் இந்து மதாபிமான சங்கத்தினர் ஒரு போதும் மறக்க முடியாது. அப்படத்தில் உள்ளோர் எழுவரில் அறுவர் இன்றும் நலமே வாழ்கின்றோம்.

28.10.19 அன்று நம் கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கானாடுகாத்தான் வரும் வழியில் நம் நண்பர்களால் வரவேற்கப் பெற்று முதன்முதலாகக் காரைக்குடியில் காலை 10.30க்கு வந்து இறங்கினார்கள். சிவன் செயல் ஊருணித் தென் கரையில் தான் அப்போது மதுரை பஸ் வந்து நிற்கும்.

நம் கவியரசர் பாரதியாருடன் வந்த தோழரையும் கவியரசருடன் ஏக வசனத்தில் அவர் பேசுவதையும் கண்ட நம் அன்பர்கள் இந்து மதாபிமான சங்கத்தில் அவர்களை புகவிட இணங்கவில்லை. எனினும் அவருடன் பேச, அவர் பாடல் களை அவர் பாடுவதைக் கேட்க விரும்பியதால் என்னுடன் நம் கவிஞர் பெருமானைக் கானாடுகாத்தானுக்கு அனுப்பவும் இணங்கவில்லை. நம் கவிஞர் திலகத்தைக் காலஞ்சென்ற செ.அ. ராம. முருகப்ப செட்டியார் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் அவருடைய தோழருடன் இறக்கி னோம். அங்கேயே அவர்களின் குளியல், உணவு முடிந்தது.

நம் கவிஞர் பெருமானின் அழகிய திருவடிவும், நிறமும், மீசை விரைப்பும், அன்பு கனிந்த வெடிப்புறப்