பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

198 சீர்திருத்தச் செம்மல்

கலந்து, சங்கத்தை வளர்க்க ஒத்துழைக்கத் தவறியதே இல்லை என்று துணிவாகக் கூறலாம்.

நம் இந்து மதாபிமான சங்கம் பெற்ற நல் வளர்ச்சியின் பயனாகத் தனவணிகர்களிடையே நம் குறிக்கோள்களில் முதலாவதான சமூகத் தொண்டு புரிய மேடைகளை உண்டாக்கக் கூடிய ஆற்றலைப் பெற்று விட்டோம்.

11.9.1919 அன்று மாலை நான்கு மணிக்கு நம் சங்க நிலையத்தில் நம் இந்து மதாபிமான சங்க உறுப்பினருள் முதன்மையான சிலர் தனவைசிய ஊழியர் சங்கத்தைத் தோற்று வித்தனர். அந்த ஊழியர் சங்கம் கடுமையான நிபந்தனைகளை உடையது. அதன் திட்டங் களில் ஒன்று 'தனவைசிய ஊழியன்' என்ற பெயரில் ஒரு வாரப் பத்திரிகை நடத்த வேண்டும் என்பது. நம் சங்கத்தின் உறுப்பினர் களில் சிலர்தான் அதன் உறுப்பினர். ஊழியர் சங்கத்தின் முதல் செயலாளரும் சொ.முரு. அவர்கள்தான்.

28.9.19 அன்று தனவணிக மரபின் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள தேவகோட்டை கரு. கி சொர்ணநாதன் செட்டியார் அவர்களி டத்தில் ஆலோசனை வாழ்த்துப் பெற நண்பர் சொ. முரு. காலஞ் சென்ற நம் சகோதரர் அமராவதிபுதூர் பிச்சப்பா, சுப்பிரமணியன் இருவருடன் தேவகோட்டை சென்றோம். "20க்கும் 24க்கும்

இடையே வயதுடைய கட்டிளங்காளை களான உங்கள் நல்ல எண்ணம் தொண்டு எல்லாம் நிறை வெய்தும். என்னாலான உதவிகளைச் செய்கிறேன். நான் உங்களில் ஒருவன்" என வாழ்த்தி அனுப்பினார்கள்.