பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 197

இக்கலாசாலையே, நம் சங்க அங்கத்தினர் மாதக் கூட்டங்கள் நடத்தி, நாவன்மை பெறச் சொற்பொழிவாற்றிப் பழக நல்ல வாய்ப்பாக இருந்தது.

நம் சங்கம் தோன்றிய இரண்டு ஆண்டுகட்குள் உள்நாடு வெளிநாடுகளில் வாழ்ந்த தனவணிகர்கள் 150 பேருக்கு மேல் நம் சங்கத்தில் உறுப்பினராகப் பெருகிச் சங்கம் நல் வளர்ச்சி பெற்றது.

1918 முதல் நம் குல வளர்ச்சி கருதித் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு, நம்மவர்கள் தங்கும் ஊர் நகரத்தார்க்கும் செய்கோன், சையாம், மலாயா, பர்மா, இலங்கை முதலிய நாடுகளில் உள்ள நகரத்தார்களுக்கும் அனுப்பினோம்.

செட்டிமார் நாட்டில் நடந்த திருவிழாக்களிலும் தனவணிகர் கூடும் இடங்களில் எல்லாமும் நம் சங்க உறுப்பினர்கள் சென்று குல வளர்ச்சி நாடி 96 ஊர்க் கூட்டத்தை மீண்டும் கூட்டிவிட வேண்டும் என்று பேசி வந்தனர். அவர்கள் அனைவரும் இந்து மதாபிமான சங்கத்தின் உறுப்பினர்கள் தாம்.

தமிழ்நாட்டில் சமயத்துறை, நாட்டு நலம்,மொழி வளர்ச்சி, இனப்பற்று ஆகிய வழிகளில் முயலும் நல்லோர்கள், பெரியோர்கள் அனைவரும் நமது சங்கத்தின் ஆண்டு விழாக்களிலும் இடையேயும் நம்முடன் ஒத்துழைத்ததால் நம் இந்து மதாபிமான சங்கம் பல நல்வாழ்த்துக்களைப் பெற்று விட்டது.

அக்காலத்தில் தமிழ் நாட்டிலிருந்த பெரியோர்களில் எவருமே நம் அழைப்புக்கிணங்கி வந்து, நம்முடன்