பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

196 சீர்திருத்தச் செம்மல்

நம் சமூக சீர்திருத்தத்தைப் பற்றி முதன் முதலாகக் கட்டுரை எழுதிச் சொற்பெருக்காற்றி வந்த அன்பர் காலஞ் சென்ற மு. சின்னையா செட்டியார் அவர்களைக் கண்டு பேச 12.8.1917 அன்று அன்பர்கள் சொ. முரு., அ. ராம. ராம.வுடன் மகிபாலன்பட்டி சென்று அவர்களுடன் இரண்டு நாள் தங்கி ஆலோசனை பெற்றோம்.

15.9.17 அன்று கண்டரமாணிக்கத்தில் விவேகானந்த சபை ஆண்டு விழா மகிபாலன்பட்டி மு. சின்னையா செட்டியார் தலைமையில் நடந்தது.

நம் நண்பர் சொ. முரு. அதில்தான் முதன் முதலாக நம் சமூக வளர்ச்சி பற்றிச் சொற்பெருக்காற்றினார். சொ. முரு. அவர்கள் அப்போது இயற்றிய பாடலைக் கீழே காணலாம்.

"உள்ளம்பூ ரித்தோம் உவகை மிகக்கொண்டோம் வெள்ளஆ னந்தம் மிகப்பெற்றோம் - கள்ளமிலாக் கண்டமா ணிக்கம்அதில் கண்ணியனாம் சின்னையனைக் கண்டமா ணிக்கம்எனக் கண்டு"

தமிழ்ப் புலவர் சிதம்பர அய்யரை ஆசிரியராகக் கொண்டு நம் சங்கத்தில் தமிழ்க் கலாசாலை ஒன்று தொடங்கப் பெற்றது. பல அன்பர்கள் அதன் மூலம் மொழி வளர்ச்சி அடைந்தனர். அன்பர் ராய. சொக்கலிங்கனார் அவர்கள், கல்வி நலம் பெற்றது இக்கலா சாலையிலேயே.