பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 31

அதைக் கானாடுகாத்தான் திரு. வை.சு.சண்முகம் செட்டியார் 1001 ரூபாய்க்கு எடுத்தார். அதனைப் பொன்னெனப் போற்றி வந்து, இப்பொழுது மக்கள் காண, மியூசியத்திற்கு அளித்துள்ளார்.'

- சி.என். கிருஷ்ண பாரதி 'ஆனந்த விகடன்' 5.10.69

(கதர்த்துணி காந்தியடிகள் தாமே நூற்றதென்றும், ஏலம் விடப் பட்ட இடம் காரைக்குடியில் மகார்நோன்பு பொட்டல், (தற்பொழுது காந்தி சதுக்கம் என்ற இடம்) என்றும் வயி.சு.ச. மகளார் பார்வதி நடராசன் அவர் வீட்டார் மூலம் அறிந்த தாகக் கூறுகிறார்)

சுயமரியாதை இயக்கப் பொருளாளர்

தந்தை பெரியார் பேராயக் கட்சியிலிருந்து விலகிப் புயல் வேகத்திற் சுற்றுப் பயணம் செய்து, சுயமரியாதைக் கொள்கை களைத் தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார்.

அக்கொள்கைகளில் செவியேற்ற சண்முகனார்க்கு அவற்றில் நம்பிக்கை பிறந்தது. அக்கொள்கைகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அக்கொள்கைகள் செட்டிநாட்டிற் பரவப் பெரிதும் பாடுபட்டார். சுய மரியாதை இயக்கத்தின் பொருளாளராகவும் செயற்பட்டு வந்தார்.

அக்காலத்தில் சுயமரியாதை இயக்கத் தொண்டர்கள், கொள்கை பரப்பும் செயற்பாட்டில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, ஊர் தோறும் சென்று, கூட்டம் போட்டுப் பேசி வருவார்கள்.