பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

30 சீர்திருத்தச் செம்மல்

பேராயக்கட்சித் தொண்டு

தொடக்கத்தில் சண்முகனார், பேராயக் கட்சி (காங்கிரசுக் கட்சி)யில் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தவர். கட்சியைத் தம் வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் வாயிலாகக் கருதாது, அதற்காகக் கைப்பொருளை மிகுதியாகச் செலவு செய்தவர். எதிர்ப்புகள் வரினும் அஞ்சாது எதிர்நின்று, கொள்கையிற் பிடிப்புடையவராக நிமிர்ந்து நின்றவர்.

காந்தியடிகள் 1927 இல் தென்னாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பொழுது, புதுக்கோட்டை வழியாகச் செட்டி நாட்டுக்கு வருகை புரிந்தார்.

வெள்ளையர் ஆட்சிக்கு அஞ்சிய செட்டிநாட்டுச் செல்வர் சிலர், காந்தியடிகள் வருகைக்குத் தடையாக இருந்தனர். அடிகளை வரவேற்கவும் கூடாது என்று ஆணைகளையும் அறிவித்து விட்டனர்.

சண்முகனார், அந்த ஆணைகட்கு மருளாது, அஞ்சாது நின்று, தடைகளை உடைத்தெறிந்து, செட்டி நாட்டில் வரவேற் பளித்தார். கானாடுகாத்தானில் தமது இன்ப மாளிகைக்குக் காந்தியடிகளை அழைத்து வந்து தங்க வைத்து, வேண்டியன செய்து மகிழ்ந்தார்.

செட்டிநாட்டில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் ஒரு 'கெஜம்' அளவுள்ள, தாமே நூற்ற கதர்த்துணியை காந்தியடிகள் ஏலம் விட்டார். வயி.சு. சண்முகனார் உரூபா ஆயிரத்தொன்று கொடுத்து, அத்துணியை வாங்கினார்.

'... தேவகோட்டைக்குக் காந்தியடிகள் வருகை தந்த போது, அவருக்களிக்கப்பட்ட மிகவும் சிறந்த கதர்த்துணியை ஏலத்தில் விட்டாராம்