பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

38 சீர்திருத்தச் செம்மல்

இதையறிந்து பெரியார், குருகுலத்தின் மீது போர் தொடுக்கத் தொடங்கினார். 'இவ்வாறு சாதிப் பிரிவினையை வளர்ப்பது தவறு. குருகுல நோக்கத்துக்கும் மாறுபாடானது. தேசிய ஒற்றுமைக்கும் ஏற்றதன்று. எல்லாப் பிள்ளைகளுக்கும் ஒரே உணவு அளிக்க வேண்டும். ஒரே இடத்தில் உண்ண வேண்டும்' என்று கூறிப் பார்த்தார். வ.வே.சு.ஐயர் ஒத்துவர வில்லை.

காந்தியடிகள் தலையிட்டும் ஐயர் இசையவில்லை. 'பார்ப்பனப் பிள்ளைகளும் அல்லாத பிள்ளைகளும் ஒன்றாக உட்கார்ந்து உணவருந்துவதற்கு நான் ஒருப்பட முடியாது. அப்படிச் செய்தால் குருகுலம் கெட்டுவிடும்' என்று ஐயர் கூறிவிட்டார் பெரியாருக்கு வேகம் வந்துவிட்டது. குருகுலத்தை ஒழித்துக் கட்ட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அப்போது அமைச்சராக இருந்த எஸ். இராமநாதன் அவர்கள் இல்லத்தில் முதன்முதலில் ஒரு கூட்டம் கூட்டினார். பெரியார், டாக்டர் வரதராசுலுநாயுடு, எஸ். இராமநாதன், திரு.வி.க. என். தண்டபாணிப் பிள்ளை முதலியோர் கூடி, டாக்டர், வரதராசுலு அவர்களைத் தலைவராகக் கொண்டு, குருகுலத்தை எதிர்த்துப் போராட்டம் தொடங்கினர்.

தமிழகமெங்கும் சுற்றுப்பயணஞ் செய்து குருகுலத்துக் கொடுமை களையெல்லாம் எடுத்துச் சொல்லி வந்தனர்.

இப்போராட்டத்தில் செட்டி நாட்டின் சார்பாக வயி.சு. சண்முகனார், அறிஞர் சொ. முருகப்பனார், தமிழ்க்கடல் இராய. சொக்கலிங்கனார் போன்ற பெரு மக்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.