பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 37

குருகுலத்தைத் தாமே ஏற்று நடத்தவும் அணியமாக (தயாராக) இருந்தார் வயி.சு. சண்முகனார் என்பதை அறியும் போது, போராட் டத்தில் கொண்டிருந்த ஈடுபாடும் அதன் பொருட்டு ஏற்கவிருந்த ஈகமும் (தியாகம்) நன்கு விளங்கு கின்றன.

இறுதியில் தேசியப் போர்வையில் வளர்ப்பதற்கென்றே தோன்றிய வ.வே.சு. ஐயரின் குருகுலம் ஒழிந்தது.

சண்முகனாரைப் பற்றிக் கவிஞர் மன்னர் மன்னன், தாம் எழுதிய 'கறுப்புக் குயிலின் நெருப்புக் குரல்' என்னும் நூலில் குறிப்பிட்டிருப் பதைக் கீழே தருகிறோம்.

"செட்டிநாட்டைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கப் பெரியார் வை.சு. சண்முகனாரின் மடல் வந்தது. இவர் பாரதியைப் புரந்த வள்ளல்; சேரன் மாதேவி குருகுலத்தை ஏற்று நடத்திய தீரம் படைத்தவர். கானாடுகாத்தானில் 'இன்ப மாளிகை' எனும் மாபெரும் வளமனையே செட்டிநாட்டுச் சீர்திருத்த இயக்கப் பாசறையாக விளங்கியது. பெருமை கொண்டது. சுயமரியாதை இயக்கத்தின் ஆழமான கருத்துகளை வலியுறுத்த 'ஞானசூரியன்' எனும் நூலினை வெளியிட்ட பெருமை இவரைச் சேர்ந்தது. இது மனுதர்மத்தின் தமிழாக்கமாகும்."

இனி, உலகம் சுற்றிய தமிழர் 'சோமலெ' அவர்கள் தமது 'செட்டிநாடும் தமிழும்' என்ற நூலில் சண்முகனாரைப் பற்றிக் குறிப்பிடுவதைக் காண்போம்;

"குருகுலத்தில் தமிழரைச் சமத்துவமாக நடத்த மகாத்மாவுடன் பேசியும் ஒரு முடிவும்