பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை செட்டிநா ட்டில் தோன்றிய வை. சு. சண்முகம் அவர்கள் நல்ல சீர்திருத்தக் கருத்துக்களை முக்கிய குறிக் கோளாகக் கொண்டு நாட்டு மக்கள் முன்னேற வேண்டும்; நாடு விடுதலை பெறவேண்டும்; மக்கள் பழம்பெருமை யையே பேசிக் கொண்டிராமல் புதிய சிந்தனைகளை மேற் கொண்டு துடிதுடிப்பாகச் செயல்பட வேண்டுமென்று பாடுபட்டிருக்கிறார்கள். இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது மகாத்மா காந்தி, மகாகவி பாரதி, பாரதிதாசன், ஈ. வெ. ரா. பெரியார், ஜீவானந்தம், நாமக்கல் கவிஞர் மற்றும் பல தேசபக்தர்களுடனும் தமிழ் அறிஞர்களுடனும் நேரடித் தொடர்பு கொண்டு நாட்டு மக்கள் நலனுக்காக உழைத் திருக்கிறார்கள். தியாகங்கள் பல புரிந்திருக்கிறார்கள். செட்டிநாட்டில் தமிழறிஞர் ராய. சொ., சொ. முருகப்பா, பிச்சப்பா சுப்பிரமணியம், காந்தி மெய்யப்பர் மற்றும் பலருடன் சேர்ந்து தனவைசிய ஊழிய சங்கம் அமைத்து நகரத்தார் சமூக நலனுக்காக நாளும் பாடுபட்டிருக்கிறார்கள். சீர்திருத்தக் கருத்துக்களையும், புரட்சியையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கிய செட்டி நாட்டு மக்களிடையே சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பி தாமே முன்மாதிரி பட "அது வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள் ைபெ. க ச . அவர்கள். 'பழம் பெருமை பேசுவதில் பயனில்லை; சாத்திர கோத்திரங்களிலேயே அமிழ்ந்து போய்விடுவதில் அர்த்தமில்லை; எதிலும் முற்போக்கில் ஈடுபட்டால்தான் செட்டிநாட்டு மக்கள் முன்னேற முடியும்' என்று துணிவோடு முழங்கியிருக்கிறார்கள். கொள்கைப் பிடிப்பும் நெஞ்சுரமும் கொண்ட வை. சு. ச. அவர்கள் பெரியாரின் சீர்திருத்தக் கொள்கை களில் பெரிதும் ஈடுபட்டு, தமிழன் தன்மானமுடைய வனாக வாழவேண்டும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும், துணிவோடு வாழ வேண்டும், தியாக உள்ளத்தோடு வாழ