பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ வேண்டும், நாட்டு மக்கள் நலனில் ஒவ்வொருவரும் அக்கறை கொள்ளவேண்டும் என்ற உயரிய கருத்துக் களை மக்களிடையே பரப்பி நல்ல லட்சியங்களோடு வாழ்ந்திருக்கிறார்கள். புலவர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் தம் செல்வம் அனைத்தையும் வாரி வழங்கிய வள்ளலாக இருந்திருக் கிறார்கள். பாரதியாரால் புகழ்ந்து பாடப்பெற்ற சண்முகனாரின் வள்ளன்மையையும் தியாகங்களையும் வீர சாகதிச் செயல் களையும் இந்நூலைப் படித்தால் தெரிந்து கொள்ளலாம். கவியரசு முடியரசனார் அவர்கள் வை. சு. சண்முக னார் அவர்களின் வாழ்க்கை நெறி- அவருடைய தொண்டு பற்றி எழுதியுள்ள இந்நூலில், வை. சு. ச. அவர்களோடு பழகிய பல அறிஞர்கள் அவருடைய உறவினர்கள் ஆகியோரின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன. ' திருமதி பார்வதி நடராசன் அவர்கள், கானாடு காத்தானிலுள்ள இன்ப மாளிகை என்னும் இல்லத்தில் தன் தந்தையார் வாழ்ந்த உயரிய வாழ்க்கையையும், வறுமையி லும் வள்ளன்மையோடும், மன உறுதியோடும் வாழ்ந்த இரிய வாழ்க்கையையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளதைப் படிப்போர் கண்கள் குளமாகும் என்பதில் ஐயமில்லை. வை. சு. ச. அவர்களின் புதல்வி பார்வதி நடராசன் அவர்கள் அனுமதியுடன் இந்நூலை வானதி பதிப்பகத்தில் பிரசுரிப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்நூலினை தொகுத்தளித்த கவியரசு முடியரசனார், நூலை ஒப்பு நோக்கி சரிபார்த்துக் கொடுத்த திரு. இராம. இப்பிரமணியம், நூல் தொகுப்பிற்கு பெரிதும் உதவியாக இருந்த வை. சு. ச. புதல்வி திருமதி பார்வதி நடராசன், வை.சு.ச. குடும்பத்தினர், சிறந்த முறையில் நூல் அச்சிட்ட பூர் பரமேஸ்வரி அச்சகத்தினர் ஆகியோருக்கு நன்றி செலுத்தக் கடம்ை ப்பட்டிருக்கிறேன். வாழ்க வை. சு. ச நாமம். வானதி ஏ. திருநாவுக்கரசு