பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, செய்யத் தகுவன செய்து, கையகத்துப் பொருளெல்லாம் கரவாது வழங்கி, எவர் மாட்டும் இன்னருள் சுரந்து மீமிசை மாந்தரெனப் பெயர் கொண்டவர் கானாடுகாத்தான் வயி. சு. சண்முகனார். அவர்தம் திருமகளாரும் எனக்குத் தமக்கையெனும் உறவு கொண்டு ஒழுகுபவருமான திருவாட்டி பார்வதி நடராசன் அவர்கள், தந்தை சண்முகனாரின் நினைவாகச் சில அறப்பணிகள் செய்தல் வேண்டுமெனும் பெரு விருப்பால், அவர்தம் பெயர் விளங்க அறக்கட்டளை யொன்று நிறுவிக் கல்விகற்பார்க்கு உதவி வருகிறார். நூல் நிலையம் ஒன்றும் அமைத்தல் வேண்டும் என்பது அம்மையாரின் பேராவல். அதனுடன் அமையாது, தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை நூலாக்க வேண்டும் என்பதும் அவருடைய விழைவு. அம்மையாரின் எண்ணங்களையும் செயல்களையும் காணுந்தொறும், மகள் தந்தைக் காற்றும் உதவி இவள் தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்- என்று திருக் குறட் பாடலையே மாற்றிப் பாடும்படி செய்துவிடும்! 'தம்பி! அப்பாவின் வரலாற்றை நூலாக எழுத வேண்டுமே; அதை நீங்கள்தான் எழுதுதல் வேண்டும்'