பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சீர்திருத்தச் செம்மல் பின்னர், முன்னிகழ்ந்தவற்றையெல்லாம் என்னிடம் விளக்கிக் கூறினார். இவ்வளவு இழிமொழிகளையும் ஏ ன் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்? மறுமணம் செய்து கொண்ட அவ்விருவரையும் தங்கேளிராக்கிக் கொண்டமையால், அதனால் வரும் இடுக்கண்களையும் தாங்கிக் கொண்டார். சரசுவதி, பாவேந்தர் பாரதிதாசன் பேரன்பிற்குரிய மூத்த மகள்; குடும்ப விளக்கு என்னும் நூல் உருக்கொள்ள அடிப்படைக் காரணமாக விளங்கியவர். பெண் மைக்குரிய அனைத்திலக்கணங்களும் ஒருங்கே அமையப் பெற்றவர். இம் மகட்கு மணமகனைத் தேர்ந் தெடுத்தது, மணமகள் இசைவு பெற்றது, மணமகனைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்றது, மணமகள் வீட்டை அழகுபடுத்தியது, பேசி முடித்தது, திருமணச் செலவுக்கு ஏற்பாடு செய்தது, திருமணத்தை நடத்தி வைத்தது எல்லாமே வயி. சு. சண்முகனாரும் அவர்தம் துணைவியார் மஞ்சுளா அம்மையாரும் சேர்ந்து செய்த ஏற்பாடுகளே. பாவேந்தர் குடும் பத்துடன் இவர் குடும்பம் எ த் த ைக ய கேண்மை கொண்டிருந்தது என்பதை அவர்கள் வாயிலாகவும் பிறர் வாயிலாகவும் அறிவோம். 'மணமகன் கண் ணப்பர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் புலவர் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தார். இவரைப் பற்றிக் கேள்விப்பட்ட நான், நேராகப் புதுவை சென்று பாவேந்த ரைக் கலந்து கொண்டு சிதம்பரம் சென்றேன். அன்பழகன் அப்போது மாணவர் என்று எண்ணுகிறேன். அன்பழகன் வீட்டுக்குக் கண்ணப்பரை வரச் சொல்லி நேரில் பார்த்தேன். அழகும் அடக்கமும் மிக்க இளைஞராக அவர் விளங்கினார். பார்த்தவுடன்