பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 49 அவரை எனக்குப் பிடித்துவிட்டது. அவருடைய: இசைவைக் கேட்டுக்கொண்டு பெண் பார்க்கும் அடுத்த கட்டத்துக்கு ஏற்பாடு செய்தேன். புதுவையில் பெண்பார்க்க நாளும் குறிக்கப்பட்டது. என் சுமையை (நகைகள்) சரசுவதியின் உடம்பில் ஏற்றி –:9H GLJ GOD GIT அலங்கரித்தேன். கண்ணப்பர் வந்தார். பெண்ணுக்கும் பிடித்தது. பெண்ணும் கண்ணப்பர் கண்ணுக்குப் பிடித்தது. திருமணம் உறுதி செய்யப் பட்டது.' இவ்வாறு (LP (15 (5 சுந்தரம் எழுதிய 'குயில் கூவிக் கொண்டிருக்கும்' என்னும் நூலில் மஞ்சுளாபாய் அம்மையார் குறிப்பிடுகிறார். இனி மணமகள் சரசுவதி என்ன கூறுகிறார் என்று அவர் வாயிலாகவே கேட்போம். '21-1-44 இல் எனக்கும் புலவர் கண்ணப்பனாருக் கும் திருச்சிராப்பள்ளியில் பதிவுத் திருமணம் நடை பெற்றது...... என் திருமணம் நடைபெறப் பெரிதும் முயற்சியெடுத்துக் கொண்டு உறுதுணையாக இருந் தவர்கள், கானாடுகாத்தான் தனவணிகர் திரு. வை. சு. சண்முகம் செட்டியாரும், அவரது துணை வியாரான மஞ்சுளாபாய் அம்மையாரும் ஆவர். அம்மையார் எங்கள் குடும்பத்தின் பால் மிக்க ஈடுபாடு கொண்டவர். அவரை அத்தை என்று அன்போடு அழைப்பதுவழக்கம். திருமதி மஞ்சுளாபாய் அம்மையார் அவர்களே மாப்பிள்ளை பார்த்து விட்டுத் திடீரென்று ஒரு நாள் புதுச்சேரி வந்தார். அவரே ஒட்டடை அடித்து வீட்டைத் தூய்மை செய்தார். பால் வாங்கிக் கொண்டு சீ.-4