பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சீர்திருத்தச் செம்மல் வந்தார். பெண் பார்க்கும் படலத்தை உடனிருந்து நடத்தினார்.' திருச்சியில் திருமணம் பதிவு செய்யப்படும் பொழுது பதிவாளருக்கும் பாவேந்த ருக்கும் சொற்போர் நடக்க விருந்த வேளையில் நம் சண்முகனார் தலையிட்டு, அதை நிறுத்தித் திருமணம் பதிவாவதற்கு உறுதுணை Ш_J [T 55 இருந்தார் என்பதைப் பாவேந்தர் மகன் மன்னர் மன்னன் தாம் எழுதிய கருப்புக் குயிலின் நெருப்புக் குரலில் எழுதியிருப்பதைக் காண்போம். '21-1-1944இல் தி ரு ச் சி துணைப்பதிவாளரும் திருமணங்களுக்கான பதிவாளருமான கே. சுப்பிரமணிய ராவ் முன்னிலையில், மணமக்களும் பெற்றோரும் உற்றாரும் நண்பர்களும் போய் நின்றோம். மணமகளின் தந்தையாரை, (பாவேந்தரை) பெயர், முகவரியெல்லாம் கேட்டுக் கொண்டே வந்த பதிவாளர், மதம்?' என்று வினவினார். மணமகளின் தந்தை அதெல்லாம் எதுக்கு? என்று மறுவினாத் தொடுத்தார். திருமணப் பதிவு நடைபெறாமல் விவாதம் நீளும் போலிருந்தது. திரு. டி. பி. வேதாசலமும், வயி. சு. சண்முகனாரும் பதிவாளரைச் சந்தித்து நிலைமையைச் சரிக்கட்டித் திருமணம் பதிவானது. வயி. சு. சண்முக னார், சண்முகவேலாயுதம், கி. ஆ. பெ. விக வநாதர் ஆகியோர் சான்றாளர் கையொப்பமிட்டனர்.' இனி, இத்திருமணம் பற்றி, மணமகள் தந்தை பாவேந்தர் பாரதிதாசனிடம் கேட்டுப் பார்ப்போம். அவர், நாமக்கல் மு. செல்லப்ப ரெட்டியாருக்குக் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.