பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 57 தங்க வைக்கலாமென்று கருதுகிறேன் என்று தயங்கித் தயங்கிச் சொன்னேன். 'இதற்கென்ன இவ்வளவு தயக்கம்? பிள்ளைகளை விட்டுவிட்டுப் போ; நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று உரிமையுடன் கூறிவிட்டு, மேசைமேலிருந்த மணியை அழுத்தினார். அவர்தம் பேத்திகள் வந்தனர். அவர்களை நோக்கி, 'பிள்ளையை உள்ளே அழைத்துக் கொண்டு போய் வேண்டியவற்றைக் கவனி" os oss ஆணையிட்டுவிட்டுச் சுப்பிரமணியத்திடம் உரையாடினார். மணமக்களுக்குப் புதிய வீடாகத் தோன்றவில்லை. பழகிய வீடாகவே தோன்றியது. அந்த அளவிற்கு அனைவரும் இவர்களுடன் பழகினர். ஒரு வாரம் கழித்து அவர்களை அழைத்து வரச் சென்றேன். 'என்ன அவசரம்? அதற்குள் ஏன் அழைத்துச் செல்ல வேண்டும்?' என்று கடிந்து கொண்டார். திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டும், அதற்காக அழைத்துச் செல்கிறேன்- என்று கூறினேன். 'சரி, அப்படியானால் அழைத்துச் செல். ஏதேனும் உதவி தேவையென்றால் உடனே இங்கே வா' என்று கூறினார். 30-4-1956 காரைக்குடியில் திருமணம் பதிவு செய்யப்பட்டது. இவ்வளவு நாள் வைத்திருந்தமைக்காகவும் இன்னும் உதவி தேவையென்றால் செய்வதாக மொழிந்தமைக்காகவும் மகிழ்ந்து முறைப்படி நன்றி கூறினேன்.