பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 சீர்திருத்தச் செம்மல் "பெரியவங்களாவது? சி ன் ன வ ங் க ள | வ து? உங்களை விடப் பெரியவன் எவனிருக்கிறான்? விழா நடந்துதான் தீரும். நீங்கள் பிள்ளைகள் முயற்சியில் தலையிடக்கூடாது' என்று ஆணையிட்டது போல் கூறிவிட்டு எழுந்து வந்து விட்டார். எங்களிடம் வந்தார். நீங்கள் விழாவிற்கு முயற்சி செய்யுங்கள்; நான் சொல்லி விட்டேன்' என்றார். நாங்கள் வெற்றிக் களிப்புடன் விழாக் குழு அமைத்து மிக்க சிறப்புடன் மணி விழா நடத்தி முடித்தோம். அக்குழுவில் சண்முகனாரும் ஒருவராவார். மேரி சுப்பிரமணியம் திருமணம் ஈரோட்டிலுள்ள என் நண்பர் சீ. ப. சுப்பிரமணியன் என்பவர் மேரியென்ற பெண்ணை விரும்ப, அப் பெண்ணும் இவரை விரும்ப இருவரும் மன மொத்தவ ராகி, உடன் போக்காகப் புறப்பட்டுக் காரைக்குடிக்கு என்னிடம் வந்து சேர்ந்தனர். அவர்கள் வீட்டில் எவரும் எதிர்ப்புரை கூறார். எனினும் அச்சம் மீது ரப் புறப்பட்டு வந்து விட்டனர். வந்து 'எங்கள் வீட்டார் தேடி வருவது உறுதி. அதனால் சில நாள் தலைமறைவாக இருக்க வேண்டும். எங்காவது பாதுகாப்பான இடத்திற் கொண்டு போய் வைத்து விடுங்கள்’ என்று வேண்டினர். யாது செய்வதென எனக்கு ஒன்றும் தோன்ற வில்லை. எண்ணிப் பார்த்தேன். சண்முகனார் என் கண் முன் தோன்றினார். 20-4-1956 அன்று விரைந்து அவரிடம் அழைத்துச் சென்றேன். நடந்தவற்றை விளக்கிக் கூறிவிட்டுச் சில நாள் இவர்களை இங்கே