பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 6 சீர்திருத்தச் செம்மல் காமராசர், தாமே எழுந்து போய் பாரதியாரை அவர் காலத்திலேயே ஆதரித்த வள்ள லே வருக என்று மிகுந்த மரியாதையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.' - நகரத்தார் குரல்’ நவம்பர் 1986 பாவேந்தர் தொடர்பு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் குடும்பத்துக்கும் சண்முகனார் குடும்பத்துக்கும் உறவு முறைப்பழக்கம் இருந்தது என்பது முன்னரே குறிப்பிடப்பட்டது. மஞ்சுளா பாய் அம்மையார், புரட்சிக்கவிஞரை ‘அண்ணன்' என்றுதான் அழைப்பார். சண்முகனார்க்கு மைத்துனர் முறையாகிறார். அந்த அளவிற்கு அவர் களுக்குள் நெருக்கமான இறுக்கமான தொடர்பிருந்தது. புரட்சிக்கவிஞருக்குப் பல வகையாலும் உதவி செய்து ஆதரித்து வந்தார். குடும்ப நிகழ்ச்சிகளில் நேரடிப் பங்கு கொண்டு, தாமே முன் னின்று நடத்தி வைத்திருக்கிறார். 'முத்தமிழ் நிலையம் தோன்றுவதற்கும், புரட்சிக் கவிஞரின் நூல் சில வெளியாகவும், இயல், இசை, நாடகம் மூன்றும் ஒருங்கே அமைந்த பாரதிதாசன் 'இன்ப இரவு அரங்கேறவும், கவிஞரின் மூத்த மகள் சரசுவதியின் திருமணம் நிகழவும் முயற்சிகள் மேற் கொண்டு, பல்வகை உதவிகள் புரிந்திருக்கிறார். இருவரும் உரிமையுடன் ஒன்றிப் பழகுவர். அதே சமயம் சண்டையும் போட்டுக் கொள்ளுவர். கடுமை யாகச் சொற்கள் வெளி வருவதும் உண்டு. குழந்தை கள் அன் போடு இணைந்து விளையாடும் பொழுது திடீரென்று 'டு விட்டுவிடுவதுண்டு. அப்படித்தான்.