பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண முகனார் 75. குறிப்பிட்ட தொகையை அன்பளிப்பாக அனுப்பி, வயி. சு. ச. இரண்டாண்டுகள் அவரை ஆதரித்து வந்தார். பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு முதலியவை. அச்சானதற்கு வயி. சு. ச. அவர்களே காரணமாவார்கள். இந் நூல்களின் கையெழுத்துப் பிரதி இவர்களிடம் இருந்து வருகிறது. - செட்டிநாடுந் தமிழும்’- சோமலெ' 'திரு. வயி. சு. சண்முகஞ் செட்டியார் கானாடு காத்தானில் பிறந்தவர். வயிரவன் கோயிலைச் சேர்ந் தவர். அவர் சிறந்த தேச பக்தர். கவி. சுப்பிரமணிய பாரதியாரை ஆதரித்த வள்ளல். தம் நெருங்கிய நண்பரான வயி. சு. ச.வைச் சந்திப் பதற்காக, பாரதியார் கானாடுதாத்தானுக்கு வந்து, சில நாள் தங்கியிருந்தார்...... இந்து மதாபிமான சங்கத்தைப் பற்றியும் நகரத்தார் களைப் பற்றியும் பாரதியார் பாடல்கள் பாடுவதற்கு வயி. சு. ச. அவர்களே காரண மாவார். வயி. சு. ச.வைப் பற்றியும் பாரதியார் விரிவாகப் பாடியிருக்கிறார். பாரதியார் பாடல்கள் சிலவற்றைச் சின்னஞ் சிறு வெளியீடுகளாக, முதல் முன்றையாகப் பாரதியார் காலத் திலேயே அச்சிட்டு வழங்கியவர். வயி. சு. ச. சமூக சீர் திருத்தவாதியாகவும் திகழ்ந்தார். ஒருமுறை வயி. சு. ச. பெருந்தலைவர் காமராசரைச் சந்திக்கத் தலைமைச் செயலகத்திற்குச் சென்றார். அவர் வந்திருப்பதாகக் ேக ள் வி ப் ப ட் ட முதலமைச்சர்