பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சீர்திருத்தச் செம்மல் இவ்வுலக மாந்தருக்கு அப்படித்தான் எண்ணத் தோன்றும். ஆனால் பாவலர் உலகம் தனியுலகம்! இதெல்லாம் அவர்களுக்கு ஒரு விளையாட்டு. அவர்கள் உள்ளத்தைக் காசாசை பற்றிக் கொள்ள முடியாது. காசும் தூசும் அவர்களுக்கு ஒன்றுதான். பற்றற்ற உண்மைத் துறவியின் மன நிலைதான் அவர்கள் மன நிலையும். பாரதியைப் புரந்த வள்ளல் பாரதியாரைப் பல்லாற்றானும் புரந்து, பேணிக் காத்துச் செட்டி நாட்டில் அவர் புகழ் பரவக் காரணமாக விளங்கியவர் வயி. சு. சண்முகனாரேயாவர். அதனைத் தமிழ்ப் பெரியார் திரு. வி. க. தமது நூலிற் சுட்டுவதைக் காணலாம். 'அந் நாளில் எ ன க் கு ப் பக்கத் துணைவராய் முன்னணி வேலை செய்தவர் சிலர். அவருள் குறிக்கத் தக் கவர் நால்வர். அவர் சொ. முருகப்பச் செட்டியார். ராய, சொக்கலிங்கஞ் செட்டியார், வயி. சு. சண்முகஞ் செட்டியார், பிச்சப்பா சுப்பிரமணியஞ் செட்டியார்......... வயி. சு. சண்முகஞ் செட்டியார் பாரதிப் பித்தர். செட்டிநாட்டில், பாரதியத்துக்குக் கால் கொண்டவர் அவரே.' -'திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புக்கள்' 'வயி. சு. சண்முகனாரின் வேண்டுகோளுக்கு இணங்கிய பாரதியார் இருமுறை- முதன் முறை 28-10-1919 முதல் 10-11-1919 வரையும் அடுத்த முறை 6-1-1920 முதல் 10-1-1920 வரையும்-செட்டிநாட்டுக்கு வந்திருந்தார். பாரதியாருக்கு மாதந்தோறும் ஒரு