பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

7 பாரதியின் பாட்டுத்தலைவன்

பாரதி வருகை

"செட்டிநாடு வட்டாரத்தில் உள்ள கானாடுகாத்தானில் சிறப்புற வாழ்ந்த வை.சு. சண்முகம் செட்டியார், நம் கவியரசர் பாரதியை ஆதரித்த வள்ளல்களுள் ஒருவர். இவருடைய அழைப்பின் பேரில், அவர் இல்லம் சென்று, அவரின் விருந்தினராகச் சில நாட்கள் தங்கியதும் உண்டு....

வை.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் அழைப்புக் கிணங்க முதல் முறையாகக் கானாடுகாத்தான் செல்லக் காரைக் குடியில் பாரதி வந்து இறங்கிய போதில், இந்த மதாபிமான சங்க நண்பர்கள் பாரதியைக் கண்டு மகிழ்ந்து அளவளாவியதுடன், அவருடைய பாடல்களைப் பாடக் கேட்டும் இன்புற்றனர். அதன் பின்னர், பாரதியை அவர்கள் கானாடுகாத்தான் செல்ல விடுத்தனர். பாரதி சில நாள்கள் கானாடுகாத்தானில் தங்கி யிருந்தார்."

சீனி. விசுவநாதன் கலைமகள் தீபாவளி மலர் 1985