பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

84 சீர்திருத்தச் செம்மல்

பாரதி பாடிய மனிதர்

பாரதியார், கானாடுகாத்தானில் தங்கியிருக்கும் பொழுது, ஒரு நாள் இன்ப மாளிகையில், அவர், கையைக் கட்டிக் கொண்டு விறைப்பாக அங்குமிங்கும் உலவிக் கொண்டிருந் தார். அதைப் பார்த்துக் கொண்டிருந்த சண்முகனார், 'ஏதாவது கவிதை பாடலாமே' என்றார்.

உடனே பாரதியார், 'கவிதை வேண்டும் போதெல்லாம் வராது; அது தானாக வரவேண்டும்' என்று விடையிறுத்து விட்டார்.

"கூட்டுக் களியினிலே - கவிதை கொண்டுதர வேணும்"


என்று பாடியவரல்லவா? அதனால், அது தானாக வரவேண்டுமே யொழிய, நினைத்த போதெல்லாம் வராது என்று சட்டென்று கூறி விட்டார்.

மீண்டும் உலவத் தொடங்கி விட்டார். சிறிது நேரம் உலா நடக்கிறது; சிந்தனை சிறகடித்துப் பறக்கிறது. பாடலும் பிறக்கிறது. 'கவிதை தானே, இதோ பாடுகிறேன். கேளுங்கள்' என்று சொல்லிப் பாடத் தொடங்கிவிட்டார். பாடி முடிந்தது. பின்னர், அப்பாடலைத் தம் கையாலேயே எழுதிக் கையொப்ப மிட்டு நாளுங் குறித்துச் சண்முகனாரிடம் கொடுத்தார். அப்பாடலை அப்படியே தருகி றோம்;

பல்லாண்டு வாழ்ந்தொளிர்க! கானாடு காத்தநகர்ப் பரிதி போன்றாய், சொல்லாண்ட புலவோர்தம் உயிர்த்துணையே, தமிழ்காக்குந் துரையே, வெற்றி