பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 35

வில்லாண்ட இராமனைப்போல் நிதியாளும் இராமனென விளங்கு வாய்நீ மல்லாண்ட திண்டோளாய், சண்முகநா மம்படைத்த வள்ளற் கோவே!

செட்டிமக்கள் குலத்தினுக்குச் சுடர்விளக்கே, பாரதமா தேவி தாளைக் கட்டியுளத் திருத்திவைத்தாய், பராசக்தி புகழ்பாடிக் கனிந்து நிற்பாய், ஒட்டியபுன் கவலைபயம் சோர்வென்னும் அரக்கரெலாம் ஒருங்கு மாள வெட்டியுயர் புகழ்படைத்தாய் விடுதலையே வடிவமென மேவி நின்றாய்.

தமிழ்மணக்கும் நின்னாவு; பழவேத உபநிடத்தின் சார மென்னும் அமிழ்துநின தகத்தினிலே மணம்வீசும்; அதனாலே அமரத் தன்மை குமிழ்படநின் மேனியெலாம் மணமோங்கும்; உலகமெலாங் குழையும் ஓசை உமிழ்படுவேய்ங் குழலுடைய கண்ணனென நினைப்புலவோர் ஓது வாரே.

பாரதத னாதிபதி யெனநினையே வாழ்த்திடுவர் பாரில் உள்ளோர்; ஈரமிலா நெஞ்சுடையோர் நினைக்கண்டால் அருள்வடிவம் இசைந்து நிற்பார்; நேரறியா மக்களெலாம் நினைக்கண்டால் நீதிநெறி நேர்ந்து வாழ்வார்; யாரறிவார் நின்பெருமை? யாரதனை மொழியினிடை அமைக்க வல்லார்?

பலநாடு சுற்றிவந்தோம்; பல்கலைகள் கற்றுவந்தோம்; இங்குப் பற்பல் குலமார்ந்த மக்களுடன் பழகிவந்தோம்; பலசெல்வர் குழாத்தைக் கண்டோம்;