பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

86 சீர்திருத்தச் செம்மல் நிலமீது நின்போல்ஓர் வள்ளமையாம் கண்டிலமே, நிலவை யன்றிப் புலனாரச் சகோரபட்சி களிப்பதற்கு வேறுசுடர்ப் பொருளிங் குண்டோ?

மன்னர்மிசைச் செல்வர்மிசைத் தமிழ்பாடி எய்ப்புற்று மனங்க சந்து பொன்னனைய கவிதையினி வானவர்க்கே அன்றிமக்கட் புறத்தார்க் கீயோம் என்னநம துளத்தெண்ணி இருந்தோம்மற் றுன்னிடத்தே இமையோர்க் குள்ள வன்னமெலாங் கண்டுநினைத் தமிழ்பாடிப் புகழ்தற்கு மனங்கொண் டோமே.

மீனாடு கொடியுயர்த்த மதவேளை நிகர்த்தவுரு மேவி நின்றாய் யா(ம்)நாடு பொருளைஎமக் கீந்தெமது வறுமையினை இன்றே கொல்வாய் வானாடும் மண்ணாடுங் களியோங்கத் திருமாது வந்து புல்கக் கானாடு காத்தநகர் அவதரித்தாய், சண்முகனாம் கருணைக் கோவே!

சித்தார்த்த - ஐப்பசி யரு.

1919, அக்டோபர் 31 சி.சுப்பிரமணிய பாரதி

கானாடுக்காத்தான்

'பொன் அனைய கவிதை' எனப் பாரதியார் கூறியது, இக்கவிதைக்கு மிகப்பொருந்தும்.

'ஒட்டிய புன் கவலை, பயம், சோர்வு என்னும் அரக்கரெல்லாம் ஒருங்கு மாய வெட்டி' எனக் கூறுவதால், சண்முகனாரிடம் கவலையோ அச்சமோ சோர்வோ சிறிதும் காணப்படாத தன்மை யைப் பாரதியார் நன்கு அறிந்து கொண்டவர் என்பது தெரிகிறது.